Thursday, December 31, 2009

சுதந்திரம்






மொழிகோர்


மாநிலம் கண்டு பிறந்தோம்


ஜாதிகொன்று காண துடித்தோம்


இதுவே நீ தந்த சுதந்திரம் ..


இனி கோத்திரதிற்கு ஒரு மாவட்டம்


பங்காளிக்கு ஒரு வார்டு


பங்கு போடுது இந்த நாடு


ஹே ராம்




Sunday, December 20, 2009

காதல்




காதல் என்பது
வினோத விளையாட்டு
இங்கே..
தோற்றவரும் பின்னர்
வெற்றி புன்னகைப்பார்
வென்றவரும் பின்னர்
தோல்வியை ஒப்பு கொள்வர்

Saturday, December 19, 2009

என் அய்யனின் சமுதாயம்



விளை நிலங்களால்
வேலியமைத்து
உழவனைக்கொண்டு
எல்லையை காப்போம்
வெட்டி பேச்சை
வேரறுத்து ..
வீணில் திரிவோரை
தூரேடுப்போம்..
மணிகூண்டு தோறும்
வள்ளுவம் ஒலிக்க
மனிதநேயம்தனை
மனதில் விதைப்போம்
இறை நம்பிக்கை எனும்
மலர்கிரிடம் சூடுவோம் ..அதில்
மதவுணர்வினை
உள்ளடையினும் உள்ளே
அணிவோம்..
அன்னை தெரசாவின்
கருணை நீர்வூற்றி
மலரட்டும் சமத்துவ சமுதாயம்
இமயம் முதல் துவங்கி -தெற்கே
என் அய்யனின் காலடி தொட்டு
கடைசி இந்திரா முனை வரை

Saturday, December 5, 2009

மனவசம்


கார்மேக கூந்தல்
பெய்யுமா ....? பொயிக்குமா...?
கலங்குவது
வானிலை மையம்
வீரப்பன்
விட்டு சென்ற
தந்தமா ? சந்தன மரமா ?
தவிர்க்கு
வனத்துறை
அசைந்து வரும் தேரா?
அர்ச்சனைக்கு உகந்த
தேவி சிலையா ?
அவதி படுவது
அறநிலைய துறை
அங்கமெல்லாம்
பங்கெடுக்கும்
அரசுத்துறைகள்
எல்லாம் உன்வசம்
நீ ஆட்சி செய்வதெல்லாம்
என் மனவசம்