Sunday, February 28, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 398: )


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.


கலைஞர் உரை:
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.


மு.வ உரை:
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.


சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

என் குத்து மதிப்பு
என்ன ... இத படிச்சுட்டு தான் ...

டாக்டர் புள்ள டாக்டர் ...
எஞ்சினியர் புள்ள எஞ்சினியர் ...
சொல்றகளோ ..?
அந்த காலத்துல ...

படமுறையில சிலபஸ் ...
மாத்தவே மட்டங்க போலிருக்கு ...
ஏழு தலைமுறைக்கு வரும் போலிருக்கு ..!
வக்கீலுக்கு நல்ல பொருந்துமோ ..?


Thursday, February 25, 2010

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

கலைஞர் உரை:
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

மு.வ உரை:
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

என் குத்து மதிப்பு :
இறை வணக்கத்திலிருந்து
இறுதில் பாடும் தேசிய கிதம்
முடிவும் வரை ..
எழுதி எடுத்து சென்ற உரையை
வசித்து முடித்த பின்பு
வாய்மூடி மௌனிய இருத்தல்
வானளவு புகழ் சேர்க்கும்

Wednesday, February 24, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 560 )

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.


மு.வ உரை:
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.


சாலமன் பாப்பையா உரை:
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.


என் குத்து மதிப்பு
பாராளும் ஆட்சி பாரட்டுவிதமாக இல்லையேல்
"பாருக்குள்" இருந்து குடிப்பான் குடிமகன்
பால் குடிப்பதறியான் அவன் மகன்
கலர் T.V யோ கவலையை பறக்கடிக்கும்
கல்வியையும் துரத்தியடிக்கும்

குறளும் குத்து மதிப்பும் (குறள் 696)

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.


மு.வ உரை:
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.


சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.


என் குத்து மதிப்பு
அடிக்கிற அடியில
காது செவிப்பறை கிழியவேணும்...
அந்த அளவுக்கு அசத்தணும்..
ஜால்ரா சத்தம்

பிறந்த நாள்

பருத்து வரும்
பூத உடலை சுமந்து அது
சிக்கென சிக்ஸ் பேக்
கொண்ட நாளை
எண்ணி எண்ணி
கவலையோடு
கரவொலிகளுக்கு நடுவே
விடும் பெரும்மூச்சில்
மெழுக்கு வர்த்தியை
அணைக்கும் நாள்

தமிழ் மாப்பிள்ளை

வந்த இடத்தில
வாயுக்கோளறு என்று
வாங்கி குடிச்சான் ஒரு
சோடா மாமனார் செலவில்
முதல் மாப்பிள்ளை ......


தனக்கும் ஓன்று வேண்டுமென
தகவல் சொல்லி அனுப்பினான்
ரெண்டாம் மாப்பிள்ளை......

Saturday, February 13, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் என் 1102: )

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

கலைஞர் உரை: நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.

மு.வ உரை: நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

சாலமன் பாப்பையா உரை: நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

குத்து மதிப்பு:
கல்யாணம் முடிந்த பிறகு நோய் தான் இருக்கும் மருந்துக்கு expiry date முடிஞ்சு போயிருக்கும் .. உனக்கும் எதிர்ப்பு சக்தி குறைஞ்சி போயிருக்கும்

குறளும் குத்து மதிப்பும் குறள் 1108:

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.


கலைஞர் உரை:
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.


மு.வ உரை:

காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.


சாலமன் பாப்பையா உரை:

இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.


பழனிராஜியின் குத்து மதிப்பு
ஓகோ ..

மெட்ரோ ரெயில்லயும் ..
சிட்டி பஸ்லையும் -எழுந்து
இருக்கை தந்தாலும்
இருக்க மறுத்து
மறந்த நிலையில
பேசிக்கொண்டு இருக்கிறார்களே ..?
இதுதான் விஷயமா ..?
உயரமான வள்ளுவன் சிலையை
ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
மெரினா கடற்கரையில் நிறுவியிருக்க வேண்டும் ..
கீழே நடக்கும் இந்த விசயங்கள்
நெறைய எழுதி இருப்பார்

குறளும் குத்து மதிப்பும் (குறள் 118 )

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

கலைஞர் உரை:
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.


மு.வ உரை:

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.


சாலமன் பாப்பையா உரை:

முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

குத்து மதிப்பு :
என்னதான் நீ ..!

ஒரு பக்கமா பிடிச்சு வச்சாலும் ...
ஆடி ஆடி

ஆமாம் சாமி போடுவது போலிருந்து
கடைசில் நேர நிமித்து
நிக்கும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி ...
சம நிலையை அடைவர் சான்றோராகிய நீதிபதிகள்

Wednesday, February 10, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 594)

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

கலைஞர் உரை: உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

மு.வ உரை:
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.


சாலமன் பாப்பையா உரை:
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.


பழனி ராஜியின் குத்துமதிப்பு :
அசையா சொத்தெல்லாம் (immovable properties )
அசையா நிலையான
ஊக்கம் உடையவனிடத்தில் வந்து சேரும் ...
ஊக்கமுடன் ஓரிடத்தில்
இருந்து வட்டி வாங்கும்
மார்வாடி முதல் இடம் பெறுவார்

Monday, February 8, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண் :1 )

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பழனிராஜியின் குத்து மதிப்பு :
சுழலும் கோள்கள் -அவை
சுற்றி சுற்றி வர ஒரு
சூரியன் ..
உனக்கும் ஒரு உயிர்
அதை சுமக்க ஒரு மெய்
தொகுத்து தந்தவனை
இறைவன் என்பாயா..?
பகுதறிவாலே
இல்லை என்பாயா..?

Sunday, February 7, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் ; 599)

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.


கலைஞர் உரை:
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.


மு.வ உரை:

யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.


சாலமன் பாப்பையா உரை:
யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.


குத்து மதிப்பு :
ஆபிசில எல்லாத்தையும் அடக்கியாளும் பெரிய பாஸு..
அந்தியில் அம்மையாரிடம் அடங்கி போகும் வெறும் புஸ்ஸு

முந்தானையால் உதறி தட்டிவிடும் தூசு

Saturday, February 6, 2010

குறளும் குத்துமதிப்பும் (குறள் எண் :127)

யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

என் குத்து மதிப்பு
காவலுக்கு வெச்ச நாயி கடிச்சா உனக்கு 'ரேபிஸ்' -உன்
காக்காத "நா" கடிச்சா மவனே.... நீ ! "பீஸ் பீஸ்"
இரண்டு இன்ச் நாவை கட்டு இல்ல
உடம்பு முழுசும் மாவு கட்டு

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 619 )

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

மு.வ : ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

சாலமன் பாப்பையா : விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

குத்துமதிப்பு :
இறைவனும் பாவம்

படியரிசி தான் அளப்பார்
சோம்பேறிய இருப்பவனுக்கு
சோறு ஆக்கமுடியாது அவரால் ..
FAST FOOD ஓட்டல் நடத்தி
HOME DELIVERY பண்ணுவதுதில்லை அவர்
உன் உழைப்புக்கு ஏத்த ஊதியம்
தரும் முதலாளி
அரை நாள் வேலை
அரை நாள் சம்பளம்
STEPS க்கு மதிப்பெண் தரும் ஆசிரியர்
"உழைப்புக்கு ஏற்ற கூலி -அதுக்கு
நீ செய்யவேணும் முயற்சி "

Friday, February 5, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 72 )

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

மு.வ : அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வார்

சாலமன் பாப்பையா : அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்

குத்து மதிப்பு : ஈகை என்பதை நகை என்று பொருள்கொண்டு தனது அம்மணத்தை அது கொண்டு மறைப்பவர் அன்பிலார் ..அன்புடையாரோ ..தனது உடலும் தானமாக தந்து இறந்தபினும் ஜோதியாய் திகழ்வார் ..அவர் புகழே.. என்றும் நறுமணம் கமழும்..

Thursday, February 4, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 90 )

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

மு.வ : அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

சாலமன் பாப்பையா : தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

ப. பழனி ராஜியின் குத்துமதிப்பு : நீ உக்கார்ந்து இருக்கும்வரை தான் புல்தரை ..எழுந்து அதுமேல் நடந்தால் கட்டாந்தரை

Wednesday, February 3, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண்: 1242)

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

* மு.வ : என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

* சாலமன் பாப்பையா : என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

குத்து மதிப்பு:
பாவம் அந்த பையன் ..!
பதவி உயர்வு இல்லை என்று
மறந்தாப்ல உன் வீட்டுக்கு
மறுபடிவும் வந்துவிட்டால் ...
காதல் என்று
கணக்கு போடுவது
என்ன நியாயம் ..?
சேல்ஸ் மேனுக்கு
சிரித்த முகம் தானே மூலதனம் ..
இதை அறியாதது உன் மூடத்தனம்

Monday, February 1, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண்: 478)

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.

மு.வ : பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

* சாலமன் பாப்பையா : வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

பழனி ராஜ் : வங்கி கணக்கில் இருப்பு இல்லாத போது "ATM ..OUT OF SERVICE " என்றல் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 33)

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.(குறள் எண் :33)

* மு.வ : செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

* சாலமன் பாப்பையா : இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

பழனி ராஜியின் குத்து மதிப்பு : தபால் நிலையத்தில் அந்த முதியவருக்கு அஞ்சல் தலை வாங்க காசு கொடுக்க வேணாம் ... அதை ஓட்ட "பசை டப்பா" நாலு கவுன்ட்டர் தள்ளி இருக்கும் எடுத்து வந்து கனிவா ஒட்டி தபால் பெட்டியில் போடு ..