Tuesday, September 28, 2010

அன்பே கடவுள்

பாதயாத்திரையைபோய்
கால்நடையை காணிக்கையாய்
தந்து பக்தன் வீடு திரும்பும் முன்
தர்மகர்த்தாவின் மாடுதொழுவதில்

கறவைக்கு தயாரானது ...
காணிக்கை காமதேனு

******************************
முடிகாணிக்கை கொடுத்தவன்
தெருக்கோடியில்
காணிக்கை முடியோ ...
கோடியில் புரளும்
சூப்பர் ஸ்டாரின் வழுக்கை தலையில்
*************************
வாரி வழங்கும் வள்ளல்
பரிவட்டம் தலைகாட்டி
கர்ப்பக்கிரகத்தில் ..
வரம் தரும் சாமியோ
பிரம்படியை வாங்க
தருமதரிசனத்தில்

***********
"பாவிகளை மீட்க்க
தேவன் வருகிறான் "
வாசகம் சுமந்த தேவாலயத்தின்
உள்ளே நோக்கினேன்

ஒருவரையும் காணோம்
TARGET ACHIEVED***********

பாவமன்னிப்பு கூறும்

பாதிரி விடுமுறையில்

பாவம் பாவிகள் ..

சுமைகளோடு ...!

**********

ஆசையை துறக்க

சொன்ன புத்தன்

போதிமரத்தடி நிழலில்

சுகமான சிந்தனையில்

*********

மயிலிறகில் ஏறும்பை

சுமந்து ...

மரத்தடி நிழலில் விட்டு

மார்வாடி சாய்வாக உக்கார்ந்தார்

மாத வட்டி கணக்கு பார்க்க ..


Saturday, September 25, 2010

ஓடிபோயிடலாம் ...!ஒரு call பண்ணிபதில் இல்லாதுமறு call பண்ணமனமில்லாதுமறுகாலில் விழுந்துஇரு காலையும் உடைத்துமரக்கால் போட்ட பின்புத்திக்கு உரைத்ததுஒருக்கால் நான்மறு call பண்ணி இருந்தால்வெறும் கால்களோடுஓடிவந்து இருப்பாள்என்னவள் என்று ....

Saturday, September 4, 2010

ஆசிரியர் தினம் பகுதி ரெண்டுபகுதி ஒன்றில் ஆரம்ப கல்வி ஆசிரியர்களை பற்றி சொன்னேன்
இங்கே ... மேல்நிலை பள்ளி சங்கர் மேல்நிலைபள்ளி , சங்கர் நகர் ..

ஆரம்ப கல்வி முடித்த பிறகு நண்பர்கள் எல்லாம் மேல்நிலைகல்விக்கு திருநெல்வேலி செல்ல என் தந்தை உருப்பிடனுமின இங்கேதான் படிக்கணும் என்று சேர்த்து விட்டார்கள்

திரு . சுந்தராமன்.என்னை ஆளாக்கியது இவர்தான் ..அத்தனை மாணவர்களுக்கு மத்தியிலும் என்னை சின்ன சின்ன செயலுக்கு பாராட்டுவார் ... இவரிடம் பாராட்டு வாங்கவே முதல் நாள் இரவு எல்லாவற்றைவும் விழுந்து விழுந்து படித்து விட்டு செல்வேன் ... "நீங்க யாரும் செல்ல மாட்டீர்கள் .. என் ஸ்டுடென் பழனிராஜ் சொல்வான் பாரு என்பர் ' அதுவே எனக்கு கிடைத்த உற்சாக டானிக் என்று எழுந்து பதில் சொன்வேன் .. அந்த போதை என்னை ப்ளஸ் டூ வில் நல்ல மதிப்பெண் எடுக்க செய்து பொறியில் கல்லூரியில் எடம் பெற்று தந்தது இயற்பியல் பாடம் என்றால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்று எங்களை கட்டிப்போட்டு விடும் ... இவர் எங்களுக்கு சொல்லி தருவது கடந்த ஆசிரயர் தினத்தன்று சாரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் ... மிகவும் சந்தோசம் அடைந்தார் இன்றைய தினம் Boston,USA இருக்கிறார்

திரு . நவநீத கிருஷ்ணன் : எல்லோராலும் V.N.K அன்பால் அழைக்கப்பட்டார்.
பாடங்களோடு உலக நடப்பையும் சொல்லித்தந்தவர் ...

திரு . பிச்சாண்டி சார் . திருப்பு முனை திருப்பு முனை என்று எங்களை பயம் காட்டி எங்களை பத்தாம் வகுப்பில் (SSLC) நல்ல மதிப்பெண் எடுக்க வைத்தார்

திரு மகாதேவன் சார் . எனக்கு ஆங்கில ஆசிரியர் . பத்தாம் வகுப்பு ஆசிரியரும் கூட . இவர் poem நடத்துவது ஒரு தனி அழகு . அந்த poem எழுதிய ஆசிரியர் வந்தால்...இது தகுநதது poem இனிய ஆசிரயர் தின வாழ்த்துக்கள் .இனிய அளவுக்கு ரசிச்சு ரசிச்சு மெய்மறந்து சொல்லி தருவர் ( எனக்கும் பத்தாம் வகுப்பில் சிறந்த மாணவன் பரிசு தர பரிந்துரை செய்து வாங்கி தந்தார் )
.
திரு .(லேட்) விஸ்வநாதன் சார் . வேதியியல் . சிரிப்பது ரொம்ப குறைவு . ப்ளஸ் டூ மதிப்பெண் தர சொல்லி பார்த்தார் .. உனக்கு கண்டிப்பா BE SEAT உண்டு என்று தைரியம் தந்தவர்.

திருமதி .சங்கர ஆவடை அம்மாள் . விலங்கியல் . ஒரு சகோதரியை போல் பாவித்தோம் .
திரு வினி பிரெண்ட் : தாவரவியல் . ஒரு மாணவர் ஆர்வ மிகுதில் பூவின் பாகம் வரையும் போது ரெட்டை இலை வரைந்து அனைவருக்கும் செய்து விட்டார் . அப்போது அவர் சொன்னது ..அவர் கோட்டை பிடித்தார் .. நீ கோட்டை விடுவாய் "

தவிர
மேலும் செல்வி விஜய லக்ஷ்மி , திரு சங்கர நாராயணன் , திரு. சிவசுப்பிரமணியன் , திரு திருவேங்கடத்தான் , திரு அனந்த நாராயணன் சார் , மற்றும் பலரின் பகிர்ந்தளிப்பு மிகவும் குறிப்பிட தகுநதது .

.

ஆசிரியர் தினம் - பகுதி ஓன்று


செப்டெம்பர் 5 .. ஆசிரியர் தினம் ..
மாதா, பிதா, குரு , தெய்வம் ... என்று நாம் கற்றுக் கொண்ட பாடம் ..
பெற்றோர்களுக்கு அடுத்த இடம் கொடுக்க வேண்டிய தகுதியும் சிறப்பும் கொண்ட நபர் .. நானும் என்னை ஆளாக்கிய ஆசிரிய பெரும்தகைகளை இங்கு நினைவு கூறவிரும்புகிறேன்

புலவர். M. சித்திரை வேல். M.A. - எங்கள் கிராமத்தில் உள்ள இளஞ்சர்கள் கொஞ்சம் உருப்பிடு இருக்கின்றார்கள் என்றால் அதன் மூலப்பொருள் இவர்தாம்.. இவருடைய சைக்கிள் எங்கள் தெரு சைக்கிள் கடைக்கு பஞ்சர் ஓட்ட வந்தாலே .. நாங்கள் அந்த தெரு வழியாக போக பயப்பிடுவோம் ... கல்யாண வீட்டு பந்தியில பரிமாறிகொண்டிருப்போம்.. இவர் அந்த கல்யாண வீட்டுக்கு வந்திருக்கிறார் என்றால் .. பரிமாறுவதை விட்டு விட்டு ஓடிவிடுவோம் ... ....................

புத்தகத்தில்
உள்ள மனப்பட செய்யுள் தவிர நெறைய திருக்குறள்களை நடத்தி புத்தக அளவு காகிதத்தில் எழுத செய்து புத்தகத்தில் ஓட்ட செய்து மனப்பாடம் செய்ய சொல்வார் .. ...................

அந்த
குக் கிராம பள்ளிகூடத்தில் உணவு பாதை பற்றி சொல்லி கொடுக்க செத்த எலி , புறா, என்று பள்ளி வளாகத்தில் இறந்த ஜந்துக்களை போஸ்ட் மார்ட்டம் செய்து காட்டுவர் .. குளியல் சோப் , சலவை சோப் என்று எல்லாவற்றையும் செய்து பார்த்து இருக்கிறோம் ... சொந்த வாழ்க்கையிலும் சும்மா இருக்க மாட்டார் ..பள்ளி நேரம் தவிர ஊர்காவல் படையில் சேர்ந்து இரவில் ரோந்து வருவார் .. ஊர்காவல் படை சீருடையில் சூப்பரா இருப்பார்
எங்களுக்கு எல்லாம் அவர்தம் இளம் வயது ஹீரோ


ஆரம்ப
பள்ளி படிப்பு முடித்த பிறகு .. அவர் எதிர வரக்கண்டால் சைக்கிளை விட்டு கிழே எறங்கி விடுவேன் ..ஏய் .. மதிப்பு மரியாதையை மனசில இருந்தால் போதும் என்பார் ...
இன்னும் சொல்வேன் நீங்கள் சிரிக்க கூடும் ..
நெல்லை பார்வதி திரையரங்கில் மூன்றம் பிறை படம் பார்க்க உயர்ந்த வகுப்பு சீட் வாங்கி அமர்ந்தேன் .. சிறிது நேரம் கழித்து பார்த்தால் பின் சீட்டில் சார் மனவியோடு வந்து இருந்தார் .. (விடுமுறை தினத்தன்று தான் ) வணக்கம் ஒரு வைத்து விட்டு மரியாதையாக இருக்காது என்று கீழ் வகுப்பில் வந்து உக்கார்ந்து படம் பார்த்தேன்


மலை
முரசு , இந்திய சிமெண்ட்ஸ் , அப்காய் கார்பைடு பாக்டரி, பாபநாசம் அணைக்கட்டு , மணிமுத்தாறு என்று எங்கள் கால் படாத இடம் ஓன்று கிடையாது ... அங்கெல்லாம் நாங்கள் சென்று பார்த்தோம் என்றால் நாங்கள் விரல் பற்றி சென்றது இவருடையது ....


நெய்வேலி
மின் நிலையத்திற்கு ஒருமுறை சென்றோம் .. கல்லுரி படிப்பின் போது அங்கே எல்லா தலைவரின் புகைப்படத்திற்கு கீழ் அவர்கள் சொன்ன பொன் மொழி எழுதி வைத்திருந்தார்கள் .. அதில் பெரும்தலைவர் காமராஜர் புகை படத்திற்கு கீழே இருந்த வாசகம்
அடித்தளத்தில் ஒழுக்கம் இருந்தால்
அனைத்தும் சிறப்பாக அமையும்

எங்கள் அடித்தளத்தை செம்பட செய்த அந்த சிற்பி இப்ப இந்த உலகத்தில் இல்லை மிகவும் குறைந்த வயதில் இறைவனடி சேர்ந்தார் .. மாரடைப்பில் மரணம் அடைந்தார் என்று கேள்வி பட்டேன் ... குதிங்காலில்.. முள் தைத்து எடுத்த பிறகும் ஒரு காந்தானம் (எரிச்சல் ) இருக்குமே ...அப்படி ஒரு காந்தானம் என் இதயத்தில் இருந்தது ... என் குரு நாதரின் மறைவு கேட்ட பிறகு ...

ஒவ்வொரு கோடைவிடுமுறைக்கும் ஊருக்கு செல்லும் போது அந்த கோவிலுக்கு சென்று (ஸ்ரீ அய்யா சாமி ஆரம்ப உயர் தர பாடசாலை) வருவது வழக்கம் இன்றும் என்னிடம் உள்ளது

இந்த ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ...
எனக்கு ஆரம்ப பட கல்வி கற்று தந்த
திரு . ஆறுமுகம் சார் , திருமதி . சண்முக சுந்தரி சித்திரவேல் , திரு சிவராமன் சார், திருமதி. தங்கபழம் , மற்றும் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்து கூறுகிறேன்