Wednesday, November 16, 2011

எழந்த பழம்


இந்தா இந்தா .. இதுபோல்
எழந்த பழம் கண்டதுண்டா ..?
உப்புத் தடவி தாரேன் ..
சப்புக் கொட்டுவே பாரு
காடு புதரில் கனிந்த கனி
கையை காயம் படுத்தி பறித்தது
இந்த கன்னி...
நொறுக்கு தீனிக்கு
நேட்டை வீசும் கனவான்களே..!
எட்டி நின்னு வேடிக்கை வேணாம்
துட்டு நீட்டி வாடிக்கை ஆகணும்

Tuesday, November 1, 2011

Record Breakfast

முந்தானையில் கைதுடைக்கும்
மச்சானின் எச்சம்
மோட்சம் பெறும்...-பின்
அவள் விரல் தொட்டு தரும்
காப்பி டபுள் ஸ்ட்ரங்னது

ஊசிப்போன வடை


கெட்டுப் போன வடையை ஊசிப்போயிட்டு என்கிறோம் அதன் உள்ளே பார்த்தால் நூல் நூலக தெரியும் ஏன் இந்த முரண்பாடு நூலை விட்டு விட்டு ஊசி மட்டும் போனதால் ஊசிப்போன வடை என்கிறோமா ?

Friday, October 14, 2011

பிளையிங் கிஸ்


இருந்த இடத்திலிருந்து
எழுந்து செல்ல முடியாத
ஊனமுற்றவர்களும்
சோம்பேறிகளும் தருவது

Sunday, October 9, 2011

நெஞ்சத்தைக்கிள்ளாதே


தலைவாசல் கோலத்தை
மருதாணியில் பதித்து
தவறாமல் தினமும்
வண்ண மெருகேற்றி- நகத்தை
எப்போதும் கூர்செய்பவளைப்
பார்த்து கூறத்தோன்றியது
"நெஞ்சத்தைக்கிள்ளாதே .."

Saturday, October 8, 2011

எம் தமிழாக்கம்

Joni Joni yes papa nursery Poem தமிழாக்கம் செய்துள்ளேன்செல்லம் என் அன்பு
செல்லம் ...
தின்னாதே என்றும்
வெல்லம்...
வள்ளுவன் சொன்ன
பொய் மட்டும் சொல்லு ...
வாய்மையே வெல்லும்
உறுதியாய் நில்லு ..
வாய் விட்டு சிரிச்சா ..
நோய் விட்டும் போகும் ..
வயிறு குலுங்க நீ - சிரி ...
ஹா...ஹா...ஹா...

எம் தமிழாக்கம்

Jack and Jill went up the hillTo fetch a pail of water.Jack fell down and broke his crown,And Jill came tumbling after.என்பதன் தமிழாக்கத்தை பார்க்கலாம் ..

பச்சையும் பிச்சையும்
பட்ட பகல் களவாணி...
பனையேறி திருடுவது
கோளிக்கை - தினசரி
தரும அடி அவர்களுக்கு
வாடிக்கை ...
பனையில் கொத்திய
நொங்குக்கு
தரையில் நெத்தியதில்
பச்சைக்கும்...
பனையில் குடித்த
கள்ளில் பல்டியடித்த
பிச்சைக்கும் ....
எலும்பு முறிவு .....

எம் தமிழாக்கம்

எம் தமிழாக்கம்
Baa, baa, black sheep,Have you any wool?Yes sir, yes sir,Three bags full.One for the master,One for the dame,And one for the little boy Who lives down the lane
என்பதன் தமிழாக்கத்தை பார்க்கலாம் ..

கொக்கரக்கோ என்று
கூவிடும் சேவல்களே ..!
கூட்டத்தில் எத்தனை பெட்டைகள்?
பட்ட கடன் தீர்க்க ஐநூறு
பாட்டி மருந்துக்கு நூறு
தவிடு தானியம் என
இரையாகும் மறுநூறு..
தங்கையே...! உன் கல்விக்கு
தவறாமல் ஒருநூறு -என
நாள்தோறும் முட்டையிடும்
நாட்டு கோழி எண்ணூறு
காலனை எதிர்நோக்கி
கறிக்கோழி ஒரு தொநூறு ..
விடியலை கூவிடும் சேவல்கள்
விடியலை தந்திடும் நல்ல பெட்டைகள் ...!

அடுத்த வாரிசு

அடுத்து யார் ?
அரியணையில் அமர்வார்
அறிவிக்கும் உரிமை
அரசருக்கு உண்டு
பண்டைக்காலத்தில் ....
பனைமரம் போல்
பக்கத்தில் நானிருக்க
எதிரே நின்றவளைக்கு
இருக்கையை கட்டிவிட்டு
இறங்கி போய் விட்டான்
மெட்ரோ ரயிலில் இன்று

Sunday, August 21, 2011

மின்சாரக்கனவு ...


வடக்கும் தெற்கும் இணைய
வற்றாத நதி வேண்டும் ...அதில்

மாநிலம் தோறும் குறுக்கே
மின்நிலையம் அமைந்திட வேண்டும்
மறுகரையில் மின்கம்பங்கள்
மாநில எல்லைகளாக பெறவேண்டும்
யாருக்குமில்லை எல்லோருக்கும்
சொந்தம் இந்த நாடு என்ற
இந்திய மின்சாரம் அதன்
கம்பிகளில் பாய்ந்திட வேண்டும்
காணிநிலம் தந்த பராசக்தியே ..! இந்த
கனவு பலித்திட வேண்டும் ...

Friday, July 1, 2011

பனையேறி


பாழையில் துளி
பதநீர் தித்தம் தர
பனையேறி செஞ்சி
கசியும் ரத்தம் ...

சிற்பியாய் இவன்
சீவுவான் பாழை ..
சிந்துகின்ற வேர்வை
வடிந்தோடும் பனை ஓலை

முறுக்கு தடி , பாழைகடி
பழைய கலயம் அருவாள்
இத்தியாதி..
இவை சுமக்கும்
இவனோ அந்த குகன் ...

பாழை அருவாள் போன்று
கூரானவன் ...
பாசத்திற்கு கட்டுப்படும்
அனுமார் இவன் ...

முறம் கொண்டு புலியை
புறம் கொள்ள செய்த
என் சகோதரி ...
கருப்புகட்டியை இனிக்க
கூப்பனியோடு
கொதித்து கொண்டிருக்கிறாள் ...

கலயம் நிறையாது ..
கவலை நிறைந்த வாழ்க்கை ...
உயரம் ஏறும் தொழில்
உயரவில்லை இன்று ...

கட்டுமரம் கட்டி கடலுக்கு
சென்று நிச்சமற்ற வாழ்வு
நிரந்தரமாய் கொண்ட
மீனவ நண்பன் இவன் ...


பாக்கெட்டில் பதனி
பதனிட்ட நுங்கு
பைப்ரௌஸ் உணவாம்
பனங்கிழங்கு
இதனையும் தர இவனுக்கு
உண்டு சக்தி ...!

எத்தனை தொழில் நுட்பம்
எத்தனை மதி நுட்பம் ... அய்யா ..!
விதியின் விற்பன்னர்களே ..!
இவன் தலை விதி மாறுமா ..?Tuesday, February 1, 2011

8 வது ஆண்டு நினைவு அஞ்சலி

தெய்வ திரு .நா.பழனிவேல்
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ,கரையிருப்பு
2.2.2003

பேரன்பால் என் ஆருயிர் அண்ணன்
வழிகாட்டலில் சாரதி கண்ணன்
பிறன் பொருள் நாடா நெஞ்சம்
இறைவழிபாடு ஒன்றே அவர் கொண்ட தஞ்சம்
ஏழ்மையிலும் பிறர் உங்கள் நிலை கண்டு
எள்ளி நகையடியபோது
கலங்கியது இல்லை- நீங்கள்
உங்கள் தோள்களில் ஏறி
உயரம் கொண்டோம் -
உங்கள் புன்சிரிப்பில் திழைத்து
துயரம் ஏது கண்டோம் ..
நிழலாய் நீங்கள் பின் தொடர்ந்தால்
கனலாய் வரும் துன்பம் யாவும் நீங்கும்
கோழையாய் ஒரு நாளும்
அழமாட்டேன் ...
சிந்தனையில் உங்களை
சுமந்து சிரித்து வாழுகிறேன் -இன்று
கண்ணீரை தடுக்க முடியாமல்

Tuesday, January 25, 2011

குறளும் குத்து மதிப்பும் (குறள் 875)

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
கலைஞர் உரை:
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
மு.வ உரை:
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.
என் குத்து மதிப்புரை :
"தனித்து நின்றால் தாங்காது
தேர்தல் கூட்டணி இலையேல் தேறாது "என்று
தொகுதி உடன்பாடு கொள்ளும் கட்சிகள் போல

Monday, January 24, 2011

தேசிய வாக்களர் தினம்


மாண்டவனும் மீண்டு வந்து
ஒட்டு போடுவான் ...
நடை பிணம் நாம் போடாத போது ...

வாக்குச்சாவடி
பொதுக்கழிப்பிடம் என்று
போகாமல் இருந்து விட்டால்-
அடுத்து வரும்
ஐந்தாண்டு அடக்கிக்கொண்டு
இருக்கவேண்டும் ...

வாக்குச்சாவடி
வணக்கத்துக்குரிய ஓர் கோவில்
காணிக்கையாய் நீதரும் வாக்கில்
காட்சி தருவாள் ஜனநாயக அன்னை ..!

வாக்குரிமையை மதிப்போம்
ஜனநாயகம் காப்போம் ..!

ஜெ ஹிந்த் ..!

குறளும் குத்து மதிப்பும் (குறள் 913)

பழகிய பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏத஧ல் பிணந்தழீஇ அற்று.
கலைஞர் உரை:
விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.
மு.வ உரை:
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.
என் குத்து மதிப்புரை :
எழுத்தாணி கொண்டு எழுதினாரா ?
ஓலையோடு ஒட்டிகொண்டிருந்த
கருக்கு மட்டையை கொண்டு விலாசினாரா ?
பட்டையை கிளப்பியிருக்கிறார் - எயிட்ஸ் வந்து
பாடையில் போரவனுக்கு புரிஞ்சா சரி .

குறளும் குத்து மதிப்பும் (குறள் 909)


அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
கலைஞர் உரை:
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
மு.வ உரை:
அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.
என் குத்து மதிப்புரை :
முழுநேரம் வீட்ல வேல செய்து பகுதி நேரம் வெளில வேல செய்ஞ்சா வரும் பொருள் விகுதி குறைவா இருக்கும்
திருவோடு உள்ளே ஏந்திரவன் தெருவோடு போறவனுக்கு என்ன தருமம் பண்ண முடியும் .

Thursday, January 20, 2011

கவிதை அரங்கேறும் நேரம்

தூக்கத்தில் எனை வருடியது
முறுவலித்தேன் - சோம்பலாக
படுக்கையை விட்ட போது
பளிங்கு தரையில் சிதறியது
பொறுக்கினேன் -பொறுமையாக
பாதையில் நடந்த போது பூத்தது
பறித்தேன் - உதிராமல்
தேநீருக்கு முன்பே கமழ்ந்தது
கோர்த்து விட்டேன் -
ம்ம் ஆஹா ..!

குறளும் குத்து மதிப்பும் (குறள் 751)

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
கலைஞர் உரை:
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
மு.வ உரை:
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.
என் குத்து மதிப்புரை :
கைநாட்டு கையில கரன்சி நோட்டு இருந்தால் ஒய் நாட என்று உலகே ஓன்று கூடி பாராட்டு விழா எடுக்கும்

குறளும் குத்து மதிப்பும் (குறள் 711)


அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
கலைஞர் உரை:
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.
மு.வ உரை:
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக.
என் குத்து மதிப்புரை :

கல்யாண பந்தியில உக்கார்ந்து கொண்டு "  சாம்பார்  சாம்பார் ஒரு இழவும் சரியில்ல " என்றும் "மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் " என்று இரங்கல் செய்தியிலும் கூறக்கூடாது ..

Wednesday, January 19, 2011

ஹிந்தி வளர்ப்புஇது ஹிந்தி வளர்ப்பு ஆதரவு கட்டுரை அல்ல ...அதன் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டும் கட்டுரை

மத்திய அரசு துறையில எல்லா ஆபிசிலேயும் ஒரு ஹிந்தி செல் உண்டு ...இந்த காகித புலிகள் பண்ணுகிற இம்சை தாங்காது சில சமயங்களில் இவங்க கைல ஒரு அங்கில பேப்பரை கொடுத்து இந்த ரிபோர்டை ஹிந்தியில் மொழி பெயர்க்கமும் என்று சொன்ன அவங்க கேட்கிற மொத்த கேள்வி எத்தனை நாட்களுக்குள் வேணும் என்பது தான் ... பாதிக்கு மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளை அப்படியே ஹிந்தியில் எழுதி எடுத்து கொண்டு வருவார்கள் ...இந்த லட்சணத்தில் அவர்கள் நம்மை பார்த்து குறை கூறுவார் ... நீங்கள் எல்லாம் தினசரி ஒரு கோப்பு ஹிந்தியில் எழுதணும் என்று ...

கடந்த ஹிந்தி காரிய சால (workshop) ல நடந்த விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் ...
  • நீங்கள் ஹிந்தில வரும் லெட்டருக்கு ஹிந்தில தான் பதில் தரனும்.
  • ஆங்கிலத்துல வாருகிற லெட்டர் ல ஹிந்தில கையெழுத்து இருந்தால் அதுக்கும் ஹிந்தில தான் பதில் தரனும்
  • கையெழுத்தும் ஹிந்தியில தான் போடணும் ...
அப்போது ஒருவர் குறுக்கிட்டு கையெழுத்து என்பது ஒருவருடைய தனித்தன்மை வாய்ந்தது கைரேகை போல் அது அவசியம் இல்லை ...ஹிந்தி தெரியாத மாநிலத்தில் இருந்து வருபவர் எழுத்தின் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதால் ...அதனை எளிதில் போர்ஜரி பண்ண இயலும் ...என்றார் ...அதை ஆமோதிக்கும் விதமாக அந்த கூட்டத்திற்கு சிறப்பு சொற்பொழிவு ஆற்ற வந்தவர் சொன்ன விஷயம் ரொம்ப வியர்ப்பில் ஆழ்த்தியது ... அவர் வங்கி கணக்கில் கையெழுத்து ரஷியன் மொழியில் இடுவாராம் ... என்ன இழிச வாய் தனமாயிருக்கு ... இந்த லட்சணத்தில் எங்களுக்கு அறிவுரை சொன்னார் ... நீங்கள் எல்லாம் தினசரி ஒரு கோப்பு ஹிந்தியில் எழுதணும் என்று...

அந்த கூட்டத்தில் ஹிந்தி அல்லாத மாநிலத்தவர் எண்ணிக்கை அதிகமாக இருத்தால் நாங்கள் சொன்னது ..." நீங்கள் (ஹிந்தியை தாய் மொழியாய் கொண்டவர்கள் ) எல்லா கோப்புகளையும் ஹிந்திலே எழுதுங்கள் ...எங்களுக்கும் வேறு வழியில்லாமல் எழுத வேண்டிய வரும் ..அதுவரை இங்கே வந்து (workshop) நீங்கள் தரும் சமுசா , தேநீர் வகையறாவை சுவைத்து விட்டு போவதை தவிர ஒரு பயனும் இல்லை " கூட்டத்தில் கூடிநின்று கூவி பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே அவர் நாளில் மறப்பாரடி!" என்ற பாரதியின் பாடல் உங்களும் சேர்த்து தான் எங்களவர் அப்பவே எழுதி விட்டு போனார்

Sunday, January 16, 2011

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண்1095)


குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.
கலைஞர் உரை:
அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்.
மு.வ உரை:
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.

என் குத்து மதிப்புரை :
சாய்ந்து பார்த்தல் அது காகம் -கண்
சுழற்றி பார்த்தல் உனக்கு வரத்துடிக்கும் பேகம்
தலையை சாய்வா பார்த்தால் பறவை
கண்ணை சரித்து பாத்தால் பாவை
ரெண்டும் மகிழும் இரை
கண்டு மகிழும்

Friday, January 14, 2011

விசு பாணியில் ஒரு குசும்பு


மன்மத அம்பு படத்தில் கமல் கவிதை சர்ச்சைக்கு இடமாகிவிட்ட நிலையில்அதை விசு பாணியில் ஒரு கற்பனை கலந்து பொங்கல் வைத்துள்ளேன்
கன்னி :
கதவை தட்டும் போது
கால தாமதம் ஏன் என்றால்
கச்சேரி வழக்கமானது தான் எச்சரிக்கை

சாம்பாரோடு ரசம் கலந்தால்
நேத்தைய மீதம் எச்சரிக்கை

தேனீர் தரும் போது
டேபிளை தட்டினால்
சூடு குறைவு எச்சரிக்கை (உனக்கும்தான் )
டேபிளில் தேனீர் சிந்திவிடுமாயின்
ரோஷம் கொள்ளாதே நீ எச்சரிக்கை

உங்கம்மவோடு ஓவர உறவாடினால்
ஊரிலிருந்து உன்மச்சன்
உன்வீட்டில் தங்க வருகிறான் - எச்சரிக்கை

உன் கல்யாண வேட்டி சட்டையை அணிந்து
கடை தெருவில் வலம் வந்தானா?
உன் துணிமணி எல்லாம் ஓன்று விடாமல்
அழுக்கு ஆக்கிவிட்டு இருப்பன் - எச்சரிக்கை

இதனையும் எதிர்கொள்ளும் நிலை ஏன் உனக்கு
அப்பன் சொன்ன பெண்ணை
அப்படியே எத்துக் கொள்வதனாலோ ...?
உன்னைப்பற்றி நண்பர்கள் என்னென சொல்லவர்
யோசிச்சி கொஞ்சம் முடிவு செய் !

காளை:

பந்தாவா சுத்திவர ஒரு பைக்கு
பக்கத்தில் அவளைவைத்து வர
சொகுசாக ஒரு காரும் வேண்டும்
எந்த நேரமும் எரிபொருள் நிரப்ப
வங்கி இருப்போடு டெபிட் கார்டு வேண்டும்
பளிங்கு தரை கொண்ட பங்களா
இத்தனையும் வரதட்சணையில் பெற்று தர
எங்க அப்பனுக்கு ஒரு சமுதாய அந்தஸ்து வேண்டி
குளத்தான்கரை பிள்ளையாரை வேண்டினேன்


கன்னி :
வரனுக்கு சீர் என்று
வாங்க முடிவு செய்தபின்
மான மரியாதை எதற்கு ?
வீட்டோடு மாப்பிள்ளையாகலாம்
பிறவி எடுத்ததே அதற்க்கு


Wednesday, January 12, 2011

குறளும் குத்து மதிப்பும் ( குறள் 1091)


இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
கலைஞர் உரை:
காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.
மு. உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.
என் குத்து மதிப்புரை
பக்கத்துக்கு தெருவில் வைத்து பஞ்சர் ஆக்கிவிட்டு
அடுத்த தெருவில் வைத்து அதை ஒட்டும் வியாபார நோக்குடைய சைக்கிள் கடை காரன் போல ...

குறளும் குத்து மதிப்பும் (குறள் 739:)


நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
கலைஞர் உரை:
இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.
மு.வ உரை:
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
சாலமன் பாப்பையா உரை:
தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.
என் குத்து மதிப்புரை :-
குறைந்த உற்பத்தி செலவு ... அதிக அளவு உற்பத்தி ..லாபம் ..இந்த சூட்சமம் நன்கறிந்தவன் நல்ல நிர்வாகி ... இதனை ஒரு நாட்டின் பொருளாதரத்திற்கு பொருந்தும் அளவிற்கு சொல்லியிருக்கிறார் ...
நோபல் பரிசு எல்லாம் அப்ப இல்லை .. இந்த பொருளாதார நிபுணருக்கு தர ...

குறளும் குத்து மதிப்பும் (குறள் 731:)


தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
கலைஞர் உரை:
செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.
மு.வ உரை:
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
சாலமன் பாப்பையா உரை:
குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.
என் குத்து மதிப்புரை
மனித வளம், முதலீடு செய்வோர் , நிர்வாகத்தினர் , இயற்க்கை வளம் , இத்தியாதி , வகையறா ... இவையெல்லாம் தேசிய வருமானத்திற்கு (NATIONAL INCOME) அடிப்படை தேவை என்பதை ... இன்று MBA STUDENTS படித்துக்கொண்டு இருக்கும் பாடத்தை அய்யன் அப்பவே சொல்லியிருக்கார் ...

Monday, January 10, 2011

குறளும் குத்து மதிப்பும் (குறள் 406:)


உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
கலைஞர் உரை:
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.
மு.வ உரை:
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
என் குத்து மதிப்புரை :
நெலம் ஆழமா உழுதிருந்தால் அதிக விளைச்சல்
மூளைல அதிக மடிப்பிருந்தால் அறிவின் தெளிச்சல்

குறளும் குத்து மதிப்பும் (குறள் 279)

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
கலைஞர் உரை:
நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.
மு.வ உரை:
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.

என் குத்து மதிப்புரை

நிமிர்த்து பார்க்கும் நிலையில் இருந்தாலும் கொம்புநெஞ்சியில் முட்ட குருதி வரும் ...
குனிந்து பார்க்கும் நெலமையில் இருந்தாலும் காம்பு
வயிறு முட்ட (பசியாற ) பால் தரும் ....


Saturday, January 8, 2011

வியாபார கவிதை
கவிதை எழுத சொல்லிவிட்டு
காத்திருந்த வாத்தியாரிடம்
எல்லாரும் விரும்பும் வண்ணம்
ரெண்டே சொல்லில்
எழுதி எடுத்து வந்தான் மாணவன்

" இலவசம் ... தள்ளுபடி !"