Wednesday, May 26, 2010

சொக்க தங்கம் தந்தாலும் ...







சொக்க தங்கம் தந்தாலும்
சொந்த ஊரு போல வருமா

பல்லு துலக்குவதற்கு முன்
படுக்கைக்கு போகும் வரை
பக்கத்திலிருந்து வயிறெரிய ஒரு
பங்காளி இங்கே உண்டா..?

ஆடு கறிக்கு அடிசிகிட்டு
கோழிகறிக்கு கூடிக்கொள்ளும்
அண்ணன் தம்பி இங்கே உண்டா ..?


கூட்டான் சோறு கட்டி கொண்டு
குறுக்குதுறை கோவில் போக
தாமிர பரணி ஆறு உண்டா ..?


சம்படம் நெறைய கஞ்சி வெச்சு
சாமண்டி பக்ஸ்ல இல ஊறுகா எடுத்து
நேரம் பார்த்து ஸ்கூலுக்கு போக -ஒரு
நெல்லை எக்ஸ்பிரஸ் இங்கே போறதுண்டா..?

மறுகால் வடியும் அருகன் குளம் -அதன்
மறுகரையில் குளித்து ஈர துணியோடு
கும்மிட்டு மகிழ என் குல தெய்வம்
குலசேகர ராஜா கோவில் உண்டா ..?


அரசமரத்தடியில்
அம்படையன் முடி திருத்தும் போது
முகத்தில் விழும் முடியை
முழுவதும் வெட்ட
அருகே அமர்ந்து
அதிகாரம் பண்ணும் அப்பாவை -நான்
பாத்தாலும் -அவர்
அங்கே கிடைப்பாரா ..?


சொக்க தங்கம் தந்தாலும்
சொந்த ஊரு போல வருமா

Wednesday, May 12, 2010

பெண்சிசு



தாலி கயிறின் நிலை கண்டு
தொட்டில் கயிறு பார்க்காமல்
தொப்புள் கொடியை
தூக்கு கயிறாக
மாட்ட துடிக்குது
தாயின் வயித்தில்
ஒரு பெண்சிசு

தாய்மை


புல் பூண்டை
கிண்டி கிளறி
புழு பூச்சியை
கொத்தி தின்னு
பொத்தி பொத்தி வளந்து
நாளுக்கு ஒரு கர்ப்பம் என
தான் இட்ட முட்டை
ஆம்லேட் ஆக
கண்டு கண்ணீர் வடித்தது
தலைகிழே தொங்கிய
தந்துரி சிக்கனின் ஆன்மா....