Monday, February 8, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண் :1 )

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பழனிராஜியின் குத்து மதிப்பு :
சுழலும் கோள்கள் -அவை
சுற்றி சுற்றி வர ஒரு
சூரியன் ..
உனக்கும் ஒரு உயிர்
அதை சுமக்க ஒரு மெய்
தொகுத்து தந்தவனை
இறைவன் என்பாயா..?
பகுதறிவாலே
இல்லை என்பாயா..?

Sunday, February 7, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் ; 599)

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.


கலைஞர் உரை:
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.


மு.வ உரை:

யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.


சாலமன் பாப்பையா உரை:
யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.


குத்து மதிப்பு :
ஆபிசில எல்லாத்தையும் அடக்கியாளும் பெரிய பாஸு..
அந்தியில் அம்மையாரிடம் அடங்கி போகும் வெறும் புஸ்ஸு

முந்தானையால் உதறி தட்டிவிடும் தூசு

Saturday, February 6, 2010

குறளும் குத்துமதிப்பும் (குறள் எண் :127)

யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

என் குத்து மதிப்பு
காவலுக்கு வெச்ச நாயி கடிச்சா உனக்கு 'ரேபிஸ்' -உன்
காக்காத "நா" கடிச்சா மவனே.... நீ ! "பீஸ் பீஸ்"
இரண்டு இன்ச் நாவை கட்டு இல்ல
உடம்பு முழுசும் மாவு கட்டு

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 619 )

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

மு.வ : ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

சாலமன் பாப்பையா : விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

குத்துமதிப்பு :
இறைவனும் பாவம்

படியரிசி தான் அளப்பார்
சோம்பேறிய இருப்பவனுக்கு
சோறு ஆக்கமுடியாது அவரால் ..
FAST FOOD ஓட்டல் நடத்தி
HOME DELIVERY பண்ணுவதுதில்லை அவர்
உன் உழைப்புக்கு ஏத்த ஊதியம்
தரும் முதலாளி
அரை நாள் வேலை
அரை நாள் சம்பளம்
STEPS க்கு மதிப்பெண் தரும் ஆசிரியர்
"உழைப்புக்கு ஏற்ற கூலி -அதுக்கு
நீ செய்யவேணும் முயற்சி "

Friday, February 5, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 72 )

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

மு.வ : அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வார்

சாலமன் பாப்பையா : அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்

குத்து மதிப்பு : ஈகை என்பதை நகை என்று பொருள்கொண்டு தனது அம்மணத்தை அது கொண்டு மறைப்பவர் அன்பிலார் ..அன்புடையாரோ ..தனது உடலும் தானமாக தந்து இறந்தபினும் ஜோதியாய் திகழ்வார் ..அவர் புகழே.. என்றும் நறுமணம் கமழும்..

Thursday, February 4, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 90 )

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

மு.வ : அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

சாலமன் பாப்பையா : தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

ப. பழனி ராஜியின் குத்துமதிப்பு : நீ உக்கார்ந்து இருக்கும்வரை தான் புல்தரை ..எழுந்து அதுமேல் நடந்தால் கட்டாந்தரை

Wednesday, February 3, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண்: 1242)

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

* மு.வ : என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

* சாலமன் பாப்பையா : என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

குத்து மதிப்பு:
பாவம் அந்த பையன் ..!
பதவி உயர்வு இல்லை என்று
மறந்தாப்ல உன் வீட்டுக்கு
மறுபடிவும் வந்துவிட்டால் ...
காதல் என்று
கணக்கு போடுவது
என்ன நியாயம் ..?
சேல்ஸ் மேனுக்கு
சிரித்த முகம் தானே மூலதனம் ..
இதை அறியாதது உன் மூடத்தனம்