Friday, November 27, 2009

காதலிக்க நேரமுண்டு

பிரமனின் படைப்பே..! என
வியந்த போது - நீ
தேவதையானாய்
உன்விழிபார்வையை சுமக்க
முடியாது -நான்
பலகினமானேன்
நாம் உலாவந்த
இடங்கள் எல்லாம்
சுவர்க்கமானது
தந்தையின் பேச்சுக்கு
நீ இசைந்ததால் -நான்
பைத்தியமானேன்
இந்தவரிகள் நீ
படிக்கும் போது
கவிதையாகும்..நானோ
காவியமகியிருப்பேன்

Wednesday, November 25, 2009

நரை















கமலின்
கர்லிங் ஹேர்..
ரஜினியின்
பரட்டை ஸ்டையில்
எத்தனை உண்டோ
அத்தனையும் பார்த்தாகிவிட்டது
இளமையின் சின்னமே
என் அருமை தலை ரோமமே ..!
வெள்ளிக்கம்பியும்
வெளிவந்தகிவிடது ..
வெளிவுலகம் சொல்லுமுன்
நான் சொல்வேன் என்று
நொந்து போன...
பிஞ்ச சீப்பு சொன்னது
"அங்கிள்" என்று

Tuesday, November 24, 2009

ரசிக்க வேண்டிய விஷ்யம்












ரசிக்க வேண்டிய விஷ்யம்
சின்ன திரை விளம்பரம் ஓன்று
மகள் அலுவல் போக தயாரகுவள்
அவள் உடுத்த வாய்த்த ஜீன்ஸ் பேன்ட்
மடல் என அறியாது.. அதில் உள்ள கிழிசல்களை
அம்மா தைக்க ஆரம்பித்து விடுவாள்
அதுபோல் .. கம்பிளி பூச்சியை பார்த்து அம்மா "ஓ..!" அலற
குட்டி மகனோ .. ஏதும் நடக்காதது போல் அந்த பூச்சியை எடுத்து
பாட்டலில் உள்ள செடியில் பாதுக்காப்பாக எடுத்து விடுவான் ..
இதுபோல் உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் ..
ஏதேனும் இருந்தால் இங்கே பகிர்ந்துகொள்ளலாமே ...
என்னுடைய பகிர்ந்தளிப்பு உண்டு..

வீட்ல என் மனைவி ஜாம் தயாரித்து கொண்டிருதார்கள்
டைனிங் டேபிள் எல்லாம் ஒரே குப்பையாக இருந்தது
எனக்கு எரிச்சல் ..
வேலை செய்வதைவிட
அந்த இடத்தை சுத்தமா வைக்கணும் என்று
உரித்து போட்ட ஆரஞ்சு பழ தோலியை
அள்ளி குப்பை பெட்டியில் போட்டுவிடேன்
kitchesan லிருந்து வந்த என் மனைவிக்கு
ஒரே கோபம் ..
இருக்காத பின்ன அவர்கள்
MARMALADE JAM தயாரிக்க வச்சுயிருந்த
ஆரஞ்சு பழ தோலியை குப்பை என்று சுத்தம் செய்துவிட்டேன்

உரம்



சமைச்சு வெச்ச அரிசி
விருந்து
துளையிடப்பட்ட முங்கில்
புல்லங்குழல்
இழுத்து கட்ட பட்ட விலங்கின் தோல்
மிருதங்கம்
எழுத்தை சுமக்கும் காகிதம்
நூல்-
இப்படி எதுவும் நடக்காத மனிதா...
நீ ...!மண்ணுக்கு உரமாகிறாய்....!

கவி

நாலு வரியில் நாலடியார்
இரண்டு வரியில் திருக்குறள்
ஒரு வரியில் ஆத்துசூடி
ஒரு சொல்லில் நானும் கவியானேன்
உன் பேரு எழுதி....

நல்ல சமையல்


சமையல்
நல்ல இருந்தால்....
எப்படி இருக்கு
எப்படி இருக்குன்னு
உயிரை எடுக்கும் மனைவிமார் ...
சுமாராக...
...மோசமாக இருந்தால்
இது புதுமாதிரி என்பாள்...
ஒத்துக்கொள்ளவிட்டல் ...
உன்னை ஒரு மாதிரி என்பாள்

Monday, November 23, 2009

வியாபார தந்திரம்

கம்யூட்டரில் படிப்பு
கைநெறைய சம்பளம்
அமெரிக்க வேலை..நாம
அருகன்குளம் மாப்பிளைக்கு
நாள் குறிக்க வந்தவரிடம்
சொன்ன சொல்

கனவுகளை சுமந்து
கட்டிலில் இருந்த
காளையிடம்
பால் செம்பினை கொண்டு
பக்கம் வந்த
பாவை சொன்ன சொல்

வாழையிலை போட்டு
வகை வகையாக கறி பரிமாறி
சோறு போடும்
முன் சொன்ன சொல்
என்ன சொல்
"CONDITION APPLY"