Saturday, January 30, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண்: 595)

வெள்ளத்தனைய மலர் நீட்டம்
மாந்தர்தம் உள்ளத்தனையதுயர்வு.
குத்து மதிப்பு
கம்யூட்டர் என்னும் கணனி நம் வாழ்வில் கலந்துவிட்ட ஒரு அங்கமாகிவிட்ட வேளையில் இந்த இணைய தளத்திற்கு ஏற்றவாறு ஒரு கருத்து சொல்லணும் ..கணனி உள்ளே இருக்கும் RAM மதிப்பும் எவ்வளவு உயர்தோ அவ்வளவு உங்கள் கணனி சிறப்பா இருக்கும் modem bitrate எவ்வளவு உயர்தோ அவ்வளவு உங்கள் internet சிறப்பா இருக்கும்

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண்: 100)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

குத்து மதிப்பு
திரைக்கு வந்தே சில மாதமான
பார்க்காத படத்தை
பக்கத்தில் அமர்ந்து பார்க்க
இல்லத்தரசி அழைத்த போது
இல்லை என்று சொன்னவர் மனம்
டிஸ்கவரி சேனலை
டிஸ்கஸ் பண்ணிக்கொண்டே
கூப்பிடாத கொழுதியா கூட அமர்ந்து
சின்னத்திரை பார்க்க நினைப்பது போன்றது

Thursday, January 28, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 621 )

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்

மு.வ : துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

சாலமன் பாப்பையா : நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.

பழனி ராஜ்: இல்லத்தரசி புதிதாக ஒரு பலகாரம் செய்து எடுத்து வந்தாலோ அல்லது இல்லத்தரசியின் இளைய வேலை வெட்டி இல்லா சகோதரன் வீட்டுக்கு வந்தாலோ நீங்க செய்யவேண்டியது .." அடட..ரொம்ப நாளைக்கு அப்புறம் ..!" என்று புன்முறுவலோடு வரவேற்க்கவேண்டும்..வரக்கூடிய வினை (கோளாறு) வந்தே தீரும் உங்க வயித்துக்கும் மணி பர்சுக்கும் .......இல்லையேல் எதிர்வினை இன்னும் கடுமையாக இருக்கும்

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 423 )

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

மு.வ : எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா : எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

பழனி ராஜ் : "அண்ணாச்சியின் கட்சி நிர்வாகத்தை தலைவர் பாராட்டினால் ஆட்சியில் அவருக்கு இடம் இல்லை" என்றும்
'இந்த முறை கூட்டணி கட்சிக்கு அதிக இடம்" என்றால் .."அவர்கள் ஜெயிக்க வாய்ப்பு உள்ள தொகுதிகள் எல்லாம் தன்கட்சிக்கு" என்றும் பொருள் ..வெறுமன தலைப்பு செய்தியை மட்டும் பார்க்க கூடாது உறைக்கு உள்ளே உறைந்து கொண்டிருக்கும் பொருளையும் ஆராய வேணும் ..!

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 467 )

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு.

மு.வ : (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

பழனி ராஜ் : பயணம் தொடங்குமுன் பையில் இருப்பது பயண சீட்டா பிளாட்பாரம் டிக்கட்டா....பார்த்துட்டு வண்டி ஏறணும்..வீடோட மாப்பிளையாக இருந்தது போதும் ன்னு வண்டி ஏறுன பிறகு பார்த்துக்கிடலாம்னு வண்டி ஏறினால்..மவனே ..! ஒரு மாமியார் வீட்டை விட்டு இன்னொரு மாமியார் வீட்டை போயி சேரவேண்டியது வந்தவிடும்

Tuesday, January 26, 2010

குறளும் குத்து மதிப்பும்-( குறள் எண் : 108 )

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.


மு.வ : ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

சாலமன் பாப்பையா : ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்

பழனி ராஜ் : எந்த பஸ்ல ஏறினாலும் முந்தின பஸ்ல இருக்க இருக்கை தந்த எல்லோரையும் நினைவில் கொள்ள வேண்டும் ..அதே சமயம் இந்த பஸ்ல பின் படிக்கட்டில இடிசுகிட்டு ஏறுனவன் முகத்தை முன்படிகட்டு இறங்கி முடிக்கும் முன்பே மறக்கணும்

குறளும் குத்து மதிப்பும்-( குறள் எண் : 15 )

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை


மு.வ : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்

சாலமன் பாப்பையா : பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்

பழனி ராஜ் : மும்மாரி பெய்தால் முல்லைக்கு தேர் கொடுப்பன் பாரி ...அது முடியாது போனால் எங்கும் கூக்குரல்கள் கேட்பான் பாரீ..!