Tuesday, January 25, 2011

குறளும் குத்து மதிப்பும் (குறள் 875)

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
கலைஞர் உரை:
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
மு.வ உரை:
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.
என் குத்து மதிப்புரை :
"தனித்து நின்றால் தாங்காது
தேர்தல் கூட்டணி இலையேல் தேறாது "என்று
தொகுதி உடன்பாடு கொள்ளும் கட்சிகள் போல

Monday, January 24, 2011

தேசிய வாக்களர் தினம்


மாண்டவனும் மீண்டு வந்து
ஒட்டு போடுவான் ...
நடை பிணம் நாம் போடாத போது ...

வாக்குச்சாவடி
பொதுக்கழிப்பிடம் என்று
போகாமல் இருந்து விட்டால்-
அடுத்து வரும்
ஐந்தாண்டு அடக்கிக்கொண்டு
இருக்கவேண்டும் ...

வாக்குச்சாவடி
வணக்கத்துக்குரிய ஓர் கோவில்
காணிக்கையாய் நீதரும் வாக்கில்
காட்சி தருவாள் ஜனநாயக அன்னை ..!

வாக்குரிமையை மதிப்போம்
ஜனநாயகம் காப்போம் ..!

ஜெ ஹிந்த் ..!

குறளும் குத்து மதிப்பும் (குறள் 913)

பழகிய பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏத஧ல் பிணந்தழீஇ அற்று.
கலைஞர் உரை:
விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.
மு.வ உரை:
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.
என் குத்து மதிப்புரை :
எழுத்தாணி கொண்டு எழுதினாரா ?
ஓலையோடு ஒட்டிகொண்டிருந்த
கருக்கு மட்டையை கொண்டு விலாசினாரா ?
பட்டையை கிளப்பியிருக்கிறார் - எயிட்ஸ் வந்து
பாடையில் போரவனுக்கு புரிஞ்சா சரி .

குறளும் குத்து மதிப்பும் (குறள் 909)


அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
கலைஞர் உரை:
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
மு.வ உரை:
அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.
என் குத்து மதிப்புரை :
முழுநேரம் வீட்ல வேல செய்து பகுதி நேரம் வெளில வேல செய்ஞ்சா வரும் பொருள் விகுதி குறைவா இருக்கும்
திருவோடு உள்ளே ஏந்திரவன் தெருவோடு போறவனுக்கு என்ன தருமம் பண்ண முடியும் .

Thursday, January 20, 2011

கவிதை அரங்கேறும் நேரம்

தூக்கத்தில் எனை வருடியது
முறுவலித்தேன் - சோம்பலாக
படுக்கையை விட்ட போது
பளிங்கு தரையில் சிதறியது
பொறுக்கினேன் -பொறுமையாக
பாதையில் நடந்த போது பூத்தது
பறித்தேன் - உதிராமல்
தேநீருக்கு முன்பே கமழ்ந்தது
கோர்த்து விட்டேன் -
ம்ம் ஆஹா ..!

குறளும் குத்து மதிப்பும் (குறள் 751)

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
கலைஞர் உரை:
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
மு.வ உரை:
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.
என் குத்து மதிப்புரை :
கைநாட்டு கையில கரன்சி நோட்டு இருந்தால் ஒய் நாட என்று உலகே ஓன்று கூடி பாராட்டு விழா எடுக்கும்

குறளும் குத்து மதிப்பும் (குறள் 711)


அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
கலைஞர் உரை:
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.
மு.வ உரை:
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக.
என் குத்து மதிப்புரை :

கல்யாண பந்தியில உக்கார்ந்து கொண்டு "  சாம்பார்  சாம்பார் ஒரு இழவும் சரியில்ல " என்றும் "மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் " என்று இரங்கல் செய்தியிலும் கூறக்கூடாது ..