Saturday, September 4, 2010

ஆசிரியர் தினம் - பகுதி ஓன்று


செப்டெம்பர் 5 .. ஆசிரியர் தினம் ..
மாதா, பிதா, குரு , தெய்வம் ... என்று நாம் கற்றுக் கொண்ட பாடம் ..
பெற்றோர்களுக்கு அடுத்த இடம் கொடுக்க வேண்டிய தகுதியும் சிறப்பும் கொண்ட நபர் .. நானும் என்னை ஆளாக்கிய ஆசிரிய பெரும்தகைகளை இங்கு நினைவு கூறவிரும்புகிறேன்

புலவர். M. சித்திரை வேல். M.A. - எங்கள் கிராமத்தில் உள்ள இளஞ்சர்கள் கொஞ்சம் உருப்பிடு இருக்கின்றார்கள் என்றால் அதன் மூலப்பொருள் இவர்தாம்.. இவருடைய சைக்கிள் எங்கள் தெரு சைக்கிள் கடைக்கு பஞ்சர் ஓட்ட வந்தாலே .. நாங்கள் அந்த தெரு வழியாக போக பயப்பிடுவோம் ... கல்யாண வீட்டு பந்தியில பரிமாறிகொண்டிருப்போம்.. இவர் அந்த கல்யாண வீட்டுக்கு வந்திருக்கிறார் என்றால் .. பரிமாறுவதை விட்டு விட்டு ஓடிவிடுவோம் ... ....................

புத்தகத்தில்
உள்ள மனப்பட செய்யுள் தவிர நெறைய திருக்குறள்களை நடத்தி புத்தக அளவு காகிதத்தில் எழுத செய்து புத்தகத்தில் ஓட்ட செய்து மனப்பாடம் செய்ய சொல்வார் .. ...................

அந்த
குக் கிராம பள்ளிகூடத்தில் உணவு பாதை பற்றி சொல்லி கொடுக்க செத்த எலி , புறா, என்று பள்ளி வளாகத்தில் இறந்த ஜந்துக்களை போஸ்ட் மார்ட்டம் செய்து காட்டுவர் .. குளியல் சோப் , சலவை சோப் என்று எல்லாவற்றையும் செய்து பார்த்து இருக்கிறோம் ... சொந்த வாழ்க்கையிலும் சும்மா இருக்க மாட்டார் ..பள்ளி நேரம் தவிர ஊர்காவல் படையில் சேர்ந்து இரவில் ரோந்து வருவார் .. ஊர்காவல் படை சீருடையில் சூப்பரா இருப்பார்
எங்களுக்கு எல்லாம் அவர்தம் இளம் வயது ஹீரோ


ஆரம்ப
பள்ளி படிப்பு முடித்த பிறகு .. அவர் எதிர வரக்கண்டால் சைக்கிளை விட்டு கிழே எறங்கி விடுவேன் ..ஏய் .. மதிப்பு மரியாதையை மனசில இருந்தால் போதும் என்பார் ...
இன்னும் சொல்வேன் நீங்கள் சிரிக்க கூடும் ..
நெல்லை பார்வதி திரையரங்கில் மூன்றம் பிறை படம் பார்க்க உயர்ந்த வகுப்பு சீட் வாங்கி அமர்ந்தேன் .. சிறிது நேரம் கழித்து பார்த்தால் பின் சீட்டில் சார் மனவியோடு வந்து இருந்தார் .. (விடுமுறை தினத்தன்று தான் ) வணக்கம் ஒரு வைத்து விட்டு மரியாதையாக இருக்காது என்று கீழ் வகுப்பில் வந்து உக்கார்ந்து படம் பார்த்தேன்


மலை
முரசு , இந்திய சிமெண்ட்ஸ் , அப்காய் கார்பைடு பாக்டரி, பாபநாசம் அணைக்கட்டு , மணிமுத்தாறு என்று எங்கள் கால் படாத இடம் ஓன்று கிடையாது ... அங்கெல்லாம் நாங்கள் சென்று பார்த்தோம் என்றால் நாங்கள் விரல் பற்றி சென்றது இவருடையது ....


நெய்வேலி
மின் நிலையத்திற்கு ஒருமுறை சென்றோம் .. கல்லுரி படிப்பின் போது அங்கே எல்லா தலைவரின் புகைப்படத்திற்கு கீழ் அவர்கள் சொன்ன பொன் மொழி எழுதி வைத்திருந்தார்கள் .. அதில் பெரும்தலைவர் காமராஜர் புகை படத்திற்கு கீழே இருந்த வாசகம்
அடித்தளத்தில் ஒழுக்கம் இருந்தால்
அனைத்தும் சிறப்பாக அமையும்

எங்கள் அடித்தளத்தை செம்பட செய்த அந்த சிற்பி இப்ப இந்த உலகத்தில் இல்லை மிகவும் குறைந்த வயதில் இறைவனடி சேர்ந்தார் .. மாரடைப்பில் மரணம் அடைந்தார் என்று கேள்வி பட்டேன் ... குதிங்காலில்.. முள் தைத்து எடுத்த பிறகும் ஒரு காந்தானம் (எரிச்சல் ) இருக்குமே ...அப்படி ஒரு காந்தானம் என் இதயத்தில் இருந்தது ... என் குரு நாதரின் மறைவு கேட்ட பிறகு ...

ஒவ்வொரு கோடைவிடுமுறைக்கும் ஊருக்கு செல்லும் போது அந்த கோவிலுக்கு சென்று (ஸ்ரீ அய்யா சாமி ஆரம்ப உயர் தர பாடசாலை) வருவது வழக்கம் இன்றும் என்னிடம் உள்ளது

இந்த ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ...
எனக்கு ஆரம்ப பட கல்வி கற்று தந்த
திரு . ஆறுமுகம் சார் , திருமதி . சண்முக சுந்தரி சித்திரவேல் , திரு சிவராமன் சார், திருமதி. தங்கபழம் , மற்றும் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்து கூறுகிறேன்

2 comments:

  1. வாழ்த்துக்கள் பழனிராஜ். தங்களுடைய உயர்விற்கு தங்களுடைய குருபக்தியும் ஒரு காரணம்.
    இந்நாட்களில் மாணவரிடையே குருபக்தி அருகிவருகிறது. பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்தி தங்கள் பிள்ளைகள் குருபக்தியுடன் இருக்க முனையவேண்டும். தற்கால ஆசிரியர்களும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றிய ஆசிரியர்கள் போல் பணியாற்ற முன்வர வேண்டும்.
    மா.மணி
    மா.மணி

    ReplyDelete