Wednesday, January 12, 2011

குறளும் குத்து மதிப்பும் ( குறள் 1091)


இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
கலைஞர் உரை:
காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.
மு. உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.
என் குத்து மதிப்புரை
பக்கத்துக்கு தெருவில் வைத்து பஞ்சர் ஆக்கிவிட்டு
அடுத்த தெருவில் வைத்து அதை ஒட்டும் வியாபார நோக்குடைய சைக்கிள் கடை காரன் போல ...

2 comments:

  1. சும்மா வாங்கிட்டே இருந்தா எப்டி? அதான் குடுத்து பாக்கறன்.... (பழிக்குப் பழி...இப்ப படி)

    தைப் பொங்கல் வாழ்த்து!

    நல்லவர்களே,
    நண்பர்களே,
    எல்லோரையும் போல
    நானும் உங்களுக்கு
    தைப்பொங்கல்,
    தமிழ்ப்புத்தாண்டு
    வாழ்த்துக்களை
    சொல்லுவேன்.

    இலங்கை “இராவணு”வம்
    நம் தமிழர்
    உதிரத்தில்
    இனியும்
    இன்பங்காணாதிருந்தால்
    வாழ்த்துக்களை
    சொல்லுவேன்.

    யாரும் இனி
    இராஜாவின்
    இலக்கை
    எந்த
    “G” கொண்டும்
    எட்டாதிருந்தால்
    வாழ்த்துக்களை
    சொல்லுவேன்.

    எந்தஅரசு வந்தாலும்
    இலவசமாய்ப் பெற
    ஏதும் இல்லாதிருந்தால்
    வாழ்த்துக்களை
    சொல்லுவேன்.

    ஏறிவிட்ட
    காய்கறிகளின் விலை
    என்றாவது
    இறங்குமென்றால்,
    இன்றேகூட
    வாழ்த்துக்களை
    சொல்லுவேன்.

    அரசியல்வாதிகளும்
    அரசாங்க அதிகாரிகளும்
    உண்மையிலே
    ஏழைகளுக்காய்
    உழைப்பதாயிருந்தால்
    உடனே
    வாழ்த்துக்களை
    சொல்லுவேன்.

    நாம் பெற்றபிள்ளை(கள்)
    நம்மையும் மதித்து
    நம் பேச்சை
    கேட்கும் பட்சத்தில்,
    இப்போதே கூட
    வாழ்த்துக்களை
    சொல்லுவேன்.

    கனவுகள் பல
    கண்டு
    கட்டியவள்
    என்றேனும்
    இனிதாய் சமைக்கக்கூடும்
    இசைவாய்ப் பேசக்கூடும்.
    அன்றுதான்
    வாழ்த்துக்களை
    சொல்லுவேன். (அப்படின்னா, எப்பவும் கிடையாதுன்னு அர்த்தமில்ல!)

    அதுவரையில்-
    அழுவதற்கு
    ஆயிரமாயிரம்
    செய்திகளும்
    தொடர்களும்
    இருந்தாலும்
    அவற்றில் சிக்காது,
    சிரிப்பதற்கு
    ஏதேனும்
    சின்ன சந்தர்ப்பம்
    கிடைத்தாலும்
    “ச்சிக்” கென பிடிப்பீர்,
    சிரித்தே வாழ்வீர்!!!
    இனிய வாழ்த்துக்கள்!!!
    -2000பி.எம்
    13012011

    ReplyDelete
  2. எரிமலை ஓன்று
    திக்குச்சிக்கு வாழ்த்து பாடுவத ?
    மலர்த்தோட்டம் ஓன்று
    தும்மை பூவை கண்டு வியர்ப்பதா ?
    அண்ணாச்சி நானும்
    இதுவரை உங்களை அறியாது விட்டேன்

    ReplyDelete