குறளும் குத்து மதிப்பும் (குறள் 406:)
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
கலைஞர் உரை: கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.
மு.வ உரை:
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
என் குத்து மதிப்புரை :
நெலம் ஆழமா உழுதிருந்தால் அதிக விளைச்சல்
மூளைல அதிக மடிப்பிருந்தால் அறிவின் தெளிச்சல்
ராஜா, உனக்கு மூளையே இல்ல ராசா... வெறும் மடிப்புதான்னு சொல்றேம்பா... நல்லாரு!
ReplyDelete