இது ஹிந்தி வளர்ப்பு ஆதரவு கட்டுரை அல்ல ...அதன் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டும் கட்டுரை
மத்திய அரசு துறையில எல்லா ஆபிசிலேயும் ஒரு ஹிந்தி செல் உண்டு ...இந்த காகித புலிகள் பண்ணுகிற இம்சை தாங்காது சில சமயங்களில் இவங்க கைல ஒரு அங்கில பேப்பரை கொடுத்து இந்த ரிபோர்டை ஹிந்தியில் மொழி பெயர்க்கமும் என்று சொன்ன அவங்க கேட்கிற மொத்த கேள்வி எத்தனை நாட்களுக்குள் வேணும் என்பது தான் ... பாதிக்கு மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளை அப்படியே ஹிந்தியில் எழுதி எடுத்து கொண்டு வருவார்கள் ...இந்த லட்சணத்தில் அவர்கள் நம்மை பார்த்து குறை கூறுவார் ... நீங்கள் எல்லாம் தினசரி ஒரு கோப்பு ஹிந்தியில் எழுதணும் என்று ...
கடந்த ஹிந்தி காரிய சால (workshop) ல நடந்த விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் ...
- நீங்கள் ஹிந்தில வரும் லெட்டருக்கு ஹிந்தில தான் பதில் தரனும்.
- ஆங்கிலத்துல வாருகிற லெட்டர் ல ஹிந்தில கையெழுத்து இருந்தால் அதுக்கும் ஹிந்தில தான் பதில் தரனும்
- கையெழுத்தும் ஹிந்தியில தான் போடணும் ...
அந்த கூட்டத்தில் ஹிந்தி அல்லாத மாநிலத்தவர் எண்ணிக்கை அதிகமாக இருத்தால் நாங்கள் சொன்னது ..." நீங்கள் (ஹிந்தியை தாய் மொழியாய் கொண்டவர்கள் ) எல்லா கோப்புகளையும் ஹிந்திலே எழுதுங்கள் ...எங்களுக்கும் வேறு வழியில்லாமல் எழுத வேண்டிய வரும் ..அதுவரை இங்கே வந்து (workshop) நீங்கள் தரும் சமுசா , தேநீர் வகையறாவை சுவைத்து விட்டு போவதை தவிர ஒரு பயனும் இல்லை " கூட்டத்தில் கூடிநின்று கூவி பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே அவர் நாளில் மறப்பாரடி!" என்ற பாரதியின் பாடல் உங்களும் சேர்த்து தான் எங்களவர் அப்பவே எழுதி விட்டு போனார்
இந்த கூத்து உங்கள் ஊரில் மட்டுமல்ல, எல்லா ஊரிலும் நடப்பதுதான். வருடத்திற்கு 6 கோடியோ, 60 கோடியோ இந்த எழவுக்குத்தான் செலவு செய்கிறார்கள்.
ReplyDeleteஅதுல தமாஷ் என்னன்னா, ஹிந்தில படிச்சி, எழுதி பாஸ் பண்ண புள்ளைங்க, கோப்புல ஹிந்தில குறிப்பு எழுதனா பைசா கொடுப்பாங்களாம். ஏண்டா நா..... பாஷ தெரிஞ்சும் ஏண்டா எழுதல, எடுபட்ட பயலே ன்னு, கேட்கறது உட்டுட்டு, ருஸ்தும் வேலய நம்மகிட்ட காட்டுவானுங்க. சுக்கா ரொட்டி சாப்டா, மூளையும் சுக்காவாதான் இருக்கும்... பக்காவவா இருக்கும்.