Saturday, October 8, 2011

எம் தமிழாக்கம்

Joni Joni yes papa nursery Poem தமிழாக்கம் செய்துள்ளேன்



செல்லம் என் அன்பு
செல்லம் ...
தின்னாதே என்றும்
வெல்லம்...
வள்ளுவன் சொன்ன
பொய் மட்டும் சொல்லு ...
வாய்மையே வெல்லும்
உறுதியாய் நில்லு ..
வாய் விட்டு சிரிச்சா ..
நோய் விட்டும் போகும் ..
வயிறு குலுங்க நீ - சிரி ...
ஹா...ஹா...ஹா...

எம் தமிழாக்கம்

Jack and Jill went up the hillTo fetch a pail of water.Jack fell down and broke his crown,And Jill came tumbling after.என்பதன் தமிழாக்கத்தை பார்க்கலாம் ..

பச்சையும் பிச்சையும்
பட்ட பகல் களவாணி...
பனையேறி திருடுவது
கோளிக்கை - தினசரி
தரும அடி அவர்களுக்கு
வாடிக்கை ...
பனையில் கொத்திய
நொங்குக்கு
தரையில் நெத்தியதில்
பச்சைக்கும்...
பனையில் குடித்த
கள்ளில் பல்டியடித்த
பிச்சைக்கும் ....
எலும்பு முறிவு .....

எம் தமிழாக்கம்

எம் தமிழாக்கம்
Baa, baa, black sheep,Have you any wool?Yes sir, yes sir,Three bags full.One for the master,One for the dame,And one for the little boy Who lives down the lane
என்பதன் தமிழாக்கத்தை பார்க்கலாம் ..

கொக்கரக்கோ என்று
கூவிடும் சேவல்களே ..!
கூட்டத்தில் எத்தனை பெட்டைகள்?
பட்ட கடன் தீர்க்க ஐநூறு
பாட்டி மருந்துக்கு நூறு
தவிடு தானியம் என
இரையாகும் மறுநூறு..
தங்கையே...! உன் கல்விக்கு
தவறாமல் ஒருநூறு -என
நாள்தோறும் முட்டையிடும்
நாட்டு கோழி எண்ணூறு
காலனை எதிர்நோக்கி
கறிக்கோழி ஒரு தொநூறு ..
விடியலை கூவிடும் சேவல்கள்
விடியலை தந்திடும் நல்ல பெட்டைகள் ...!

அடுத்த வாரிசு

அடுத்து யார் ?
அரியணையில் அமர்வார்
அறிவிக்கும் உரிமை
அரசருக்கு உண்டு
பண்டைக்காலத்தில் ....
பனைமரம் போல்
பக்கத்தில் நானிருக்க
எதிரே நின்றவளைக்கு
இருக்கையை கட்டிவிட்டு
இறங்கி போய் விட்டான்
மெட்ரோ ரயிலில் இன்று

Sunday, August 21, 2011

மின்சாரக்கனவு ...


வடக்கும் தெற்கும் இணைய
வற்றாத நதி வேண்டும் ...அதில்

மாநிலம் தோறும் குறுக்கே
மின்நிலையம் அமைந்திட வேண்டும்
மறுகரையில் மின்கம்பங்கள்
மாநில எல்லைகளாக பெறவேண்டும்
யாருக்குமில்லை எல்லோருக்கும்
சொந்தம் இந்த நாடு என்ற
இந்திய மின்சாரம் அதன்
கம்பிகளில் பாய்ந்திட வேண்டும்
காணிநிலம் தந்த பராசக்தியே ..! இந்த
கனவு பலித்திட வேண்டும் ...

Friday, July 1, 2011

பனையேறி


பாழையில் துளி
பதநீர் தித்தம் தர
பனையேறி செஞ்சி
கசியும் ரத்தம் ...

சிற்பியாய் இவன்
சீவுவான் பாழை ..
சிந்துகின்ற வேர்வை
வடிந்தோடும் பனை ஓலை

முறுக்கு தடி , பாழைகடி
பழைய கலயம் அருவாள்
இத்தியாதி..
இவை சுமக்கும்
இவனோ அந்த குகன் ...

பாழை அருவாள் போன்று
கூரானவன் ...
பாசத்திற்கு கட்டுப்படும்
அனுமார் இவன் ...

முறம் கொண்டு புலியை
புறம் கொள்ள செய்த
என் சகோதரி ...
கருப்புகட்டியை இனிக்க
கூப்பனியோடு
கொதித்து கொண்டிருக்கிறாள் ...

கலயம் நிறையாது ..
கவலை நிறைந்த வாழ்க்கை ...
உயரம் ஏறும் தொழில்
உயரவில்லை இன்று ...

கட்டுமரம் கட்டி கடலுக்கு
சென்று நிச்சமற்ற வாழ்வு
நிரந்தரமாய் கொண்ட
மீனவ நண்பன் இவன் ...


பாக்கெட்டில் பதனி
பதனிட்ட நுங்கு
பைப்ரௌஸ் உணவாம்
பனங்கிழங்கு
இதனையும் தர இவனுக்கு
உண்டு சக்தி ...!

எத்தனை தொழில் நுட்பம்
எத்தனை மதி நுட்பம் ... அய்யா ..!
விதியின் விற்பன்னர்களே ..!
இவன் தலை விதி மாறுமா ..?







Tuesday, February 1, 2011

8 வது ஆண்டு நினைவு அஞ்சலி

தெய்வ திரு .நா.பழனிவேல்
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ,கரையிருப்பு
2.2.2003

பேரன்பால் என் ஆருயிர் அண்ணன்
வழிகாட்டலில் சாரதி கண்ணன்
பிறன் பொருள் நாடா நெஞ்சம்
இறைவழிபாடு ஒன்றே அவர் கொண்ட தஞ்சம்
ஏழ்மையிலும் பிறர் உங்கள் நிலை கண்டு
எள்ளி நகையடியபோது
கலங்கியது இல்லை- நீங்கள்
உங்கள் தோள்களில் ஏறி
உயரம் கொண்டோம் -
உங்கள் புன்சிரிப்பில் திழைத்து
துயரம் ஏது கண்டோம் ..
நிழலாய் நீங்கள் பின் தொடர்ந்தால்
கனலாய் வரும் துன்பம் யாவும் நீங்கும்
கோழையாய் ஒரு நாளும்
அழமாட்டேன் ...
சிந்தனையில் உங்களை
சுமந்து சிரித்து வாழுகிறேன் -இன்று
கண்ணீரை தடுக்க முடியாமல்