Sunday, August 21, 2011

மின்சாரக்கனவு ...


வடக்கும் தெற்கும் இணைய
வற்றாத நதி வேண்டும் ...அதில்

மாநிலம் தோறும் குறுக்கே
மின்நிலையம் அமைந்திட வேண்டும்
மறுகரையில் மின்கம்பங்கள்
மாநில எல்லைகளாக பெறவேண்டும்
யாருக்குமில்லை எல்லோருக்கும்
சொந்தம் இந்த நாடு என்ற
இந்திய மின்சாரம் அதன்
கம்பிகளில் பாய்ந்திட வேண்டும்
காணிநிலம் தந்த பராசக்தியே ..! இந்த
கனவு பலித்திட வேண்டும் ...

3 comments:

  1. //யாருக்குமில்லை எல்லோருக்கும்
    சொந்தம் இந்த நாடு//
    எண்ணமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.ஆனா இப்ப இருக்க அரசியல் வாதிய ஒங்க எண்ணத்த பத்தியா யோசிப்பானுவ.போங்கண்ணே. இன்னும் பத்து வருசம் கழிச்சு நீங்க தமிழனா நொய்டாவுல வேல செய்ய முடிஞ்சாலே சந்தோசந்தான்.

    ReplyDelete
  2. “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே” என்று சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பாடிய பாரதியின் வாக்க பலித்ததுபோல் தங்கள் கனவும் பலிக்கட்டும்.

    ReplyDelete
  3. நியாயமான ஆசை, அநியாயமான நாட்டில்...

    ReplyDelete