அறியா பருவத்திலும்
அன்னை மீது பாசம் ..
எல்லோருக்கும் உள்ளது -அது
எனக்கு கொஞ்சம் அதிகம்
கோவில் பிரசாதமாகட்டும் ...
குடியரசு தின இனிப்பாகட்டும்
கூட்டுகுடும்பத்தில்
குனிந்த தலை நிமிராத அன்னைக்கு
அப்பாவும் அறியாவண்ணம்
அருகே சென்று தருவாதுண்டாம் ..
சுட்டித்தனத்தை எல்லாம்
சொல்லி சொல்லி மகிழ்வார்
என் தந்தை ...
இன்று என் பிள்ளை
என்னையும் மிஞ்சுகிறான்
தாய் பாசத்தில் ...
வியப்பதற்கென்ன என
வினவத்தோணும்....
என்னுள் என்ன ஊனம் ?
என்னைவிட அவள்மீது
பாசம் ......!
அன்று என் அப்பாவுக்கு
இன்று என்றேன் நிலை எண்ணி
அழத்தோணும்....
அப்பா என்னை தூக்கிவிட்ட
உங்கள் தோள்கள் வேண்டும் ..
என் முகம் புதைத்து நான் அழவேண்டும் ..!
மிக நன்றாக உள்ளது நண்ப,
ReplyDeleteஇயற்கை நமக்கு தேடல்களை அளித்தது, நாம் பிறர்க்காக தேடுகிறோம். உங்கள் மன சாட்சியை கேட்டுபாருங்கள், நீங்கள் உங்கள் மனைவிக்கு தேடியதை கொடுத்தீர்கள் ( ஏ பெண்ணே இன்று இது என்னுடைய வருமானம் இதை நீ வைத்துக்கொண்டு என்னையும் என் மகனையும் காப்பாற்றுவாயாக) , உங்கள் மகன் கிடைத்ததை கொடுத்தான், (அம்மா, அப்பா கொடுத்ததை நீ எனக்கும், என் அப்பாவுக்கும் மட்டும் கொடுத்தாய் உனக்கென்று எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை இதையாவது எடுத்துகொள் இதுதான் அதனுடைய அர்த்தம்)
இது வாழ்கை சுழற்சி, பிறருக்காக வாழ கற்றுகொள்ளும் முயற்சி.
எதார்த்தமான கவிதை, மிக நன்றாக உள்ளது
நன்றி நண்ப
என்றும் THAMBI RA
- Show quoted text -
ReplyDeleteஅன்பு தமிழ் உறவே!
வணக்கம்!
இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"எல்லோருக்கும் பிடித்த ஹீரோ"
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!
வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)
வலைச் சரம்
கவி மழை புவி புகும்
இல்லம் வலைச் சரம்!
கதை நல் விதை விதைக்கும்
விளை நிலம் வலைச்சரம்!
கட்டுரைத் தேன் தென்றல் தழுவிடும்
மேனி வலைச் சரம்
செந்தமிழ் இலக்கியம் பைந்தமிழ் இலக்கணம்
பிறக்கும் கருவறை வல்லோர்
நிறைந்த வலைச்சரம் வாழி!
புதுவை வேலு