Sunday, December 5, 2010

நாட்டமை தீர்ப்பு


ஒத்திகை என்றதும்

உடனடி நடவடிக்கை

நிஜத்தில் நடந்த போது

நித்திரையில் - போலீஸ்

பாலியியல் பலாத்கார

பாவிக்கு பாதுகாப்பு எதுக்கு

என்கவுண்டரில் போட்டு தள்ள

என்விரோமேண்டல் கிளியரன்ஸ்

தேவை இல்லை ..

வேண்டிய விவரங்களுக்கு

விவேக் காமெடி பார்க்கவும்

Thursday, November 25, 2010

"குதிரை புல்லோடு..

"குதிரை புல்லோடு நட்பு கொண்டால் பட்னி சாவு" கேட்ட நல்ல இருக்குதுல்ல இந்த பழமொழி அதை சொன்ன இடம் எது என்று தெரிந்தால் வேதனையா இருக்கும் .. சொன்னவர் திருப்பதி உண்டியலில் ஐம்பது லட்சத்தை காணிக்கையா போட்டுவிட்டு போலியோ சொட்டு மருந்து விளம்பரத்திற்கு காணிக்கையை கறாரக வாங்கிய ஹிந்தி படஉலகின் முடிசூட மன்னன் அமிதாப் பச்சன் தான் வாங்கிய காணிக்கையை நியாய படுத்தி சொன்னது ..இது பழையவிசயம் இப்ப எதுக்கு நினைவு படுத்துற என கேட்ட தோணுமே ..! சமீபத்தில் தினகரன் தில்லி பதிப்பில் வசித்த விஷயத்தை உங்களுக்கு பிட்டு போடுகிறேன் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

Wednesday, November 24, 2010

காவியாவின் கைவண்ணம்




காவியாவின் கைவண்ணம் என்று எனக்கு இன்றும் ஒரு வலைப்பூ எழுத வேண்டும் போலிருக்கு அந்த அளவுக்கு ஒரு ஓவியம் ஓன்று அவள் வரைந்து பள்ளியின் ஆண்டு மலரில் வந்துள்ளது .. நீங்களும் ரசிக்கலாம் ... ரெண்டு வரி அந்த குழந்தையை பாராட்டி எழுதவும் தெரியணும் உங்களுக்கு

Tuesday, November 16, 2010

குழந்தைகள் தின ஓவிய போட்டி

என் அன்பிற்கு பாத்திரமான நண்பர் திரு செல்வகுமாரின் மகள் காவியா (6 வது வகுப்பு , இண்டஸ் வேலி பப்ளிக் ஸ்கூல் நொய்டா )..மாநில அளவிலில் நடந்த ஓவிய போட்டியில் கலந்து கொண்டாள்..இடம் லக்னோ ...நாள் 14.11.2010அப்போது நண்பரின் புகைப்பட கருவி உள்வாங்கிய காட்சிகளை உங்களுக்கு பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்
கவியா வரைந்த ஓவியம்









ஆறுதல் பரிசு பெற்ற ஓவியம்


ஆறுதல் பரிசு பெற்ற ஓவியம்

ஆறுதல் பரிசு பெற்ற ஓவியம்














இரெண்டாம் பரிசு பெற்ற ஓவியம்

முதல் பரிசு பெற்ற ஓவியம்


பங்கு பெற்றவர்கள்


Sunday, November 14, 2010

விருட்க்ஷம்


விதையிலிருந்து வந்த
விருட்க்ஷம்
வாடிப்போனது ஐயோ
துரதிஷ்டம்

கனியும் முன்பே
காய் பறிக்கப்பட்டது
விதையில் இருந்த மரமோ
கருவில் சிதைக்கப்பட்டது

கன்றை விடு
மடியில் பால் சுரக்கும்
மரக்கன்றை நடு
அவணியில் மழை பொழியும்

Saturday, November 6, 2010

கமல் பிறந்த நாள் வாழ்த்து


தொப்புள் கொடியில்
நீ குடித்தது - பரதம்
உன் நடிப்பில் கட்டுண்டு
கிடப்பது -பாரதம்
...


ஒய்வு எடுக்க
ஓடியது இல்லை
நீ தேடி இமயம்
உன்சாதனையில்
இளைப்பாறுமே அந்த சிகரம்


நவம்பர் தந்த
குறிஞ்சி மலரே ..!



அன்பே சிவம் என்று
பகுத்தறிவோடு பக்தியை
போதித்த பிராமண பெரியாரே ..!


நடிப்பின் இலக்கணமே- நீ
வாழவேண்டும் பல்லாண்டு

Tuesday, September 28, 2010

அன்பே கடவுள்

பாதயாத்திரையைபோய்
கால்நடையை காணிக்கையாய்
தந்து பக்தன் வீடு திரும்பும் முன்
தர்மகர்த்தாவின் மாடுதொழுவதில்

கறவைக்கு தயாரானது ...
காணிக்கை காமதேனு

******************************
முடிகாணிக்கை கொடுத்தவன்
தெருக்கோடியில்
காணிக்கை முடியோ ...
கோடியில் புரளும்
சூப்பர் ஸ்டாரின் வழுக்கை தலையில்
*************************
வாரி வழங்கும் வள்ளல்
பரிவட்டம் தலைகாட்டி
கர்ப்பக்கிரகத்தில் ..
வரம் தரும் சாமியோ
பிரம்படியை வாங்க
தருமதரிசனத்தில்

***********
"பாவிகளை மீட்க்க
தேவன் வருகிறான் "
வாசகம் சுமந்த தேவாலயத்தின்
உள்ளே நோக்கினேன்

ஒருவரையும் காணோம்
TARGET ACHIEVED



***********

பாவமன்னிப்பு கூறும்

பாதிரி விடுமுறையில்

பாவம் பாவிகள் ..

சுமைகளோடு ...!

**********

ஆசையை துறக்க

சொன்ன புத்தன்

போதிமரத்தடி நிழலில்

சுகமான சிந்தனையில்

*********

மயிலிறகில் ஏறும்பை

சுமந்து ...

மரத்தடி நிழலில் விட்டு

மார்வாடி சாய்வாக உக்கார்ந்தார்

மாத வட்டி கணக்கு பார்க்க ..