விளை நிலங்களால்
வேலியமைத்து
உழவனைக்கொண்டு
எல்லையை காப்போம்
வெட்டி பேச்சை
வேரறுத்து ..
வீணில் திரிவோரை
தூரேடுப்போம்..
மணிகூண்டு தோறும்
வள்ளுவம் ஒலிக்க
மனிதநேயம்தனை
மனதில் விதைப்போம்
இறை நம்பிக்கை எனும்
மலர்கிரிடம் சூடுவோம் ..அதில்
மதவுணர்வினை
உள்ளடையினும் உள்ளே
அணிவோம்..
அன்னை தெரசாவின்
கருணை நீர்வூற்றி
மலரட்டும் சமத்துவ சமுதாயம்
இமயம் முதல் துவங்கி -தெற்கே
என் அய்யனின் காலடி தொட்டு
கடைசி இந்திரா முனை வரை
VERY NICE
ReplyDeletethanks to all
ReplyDelete