மாடு பிடித்த கரங்களில்
ஏடு பிடிக்க செய்த மகாராஜன்
குலக்கல்வில் நீயும் நானும்-
சீர்குலைந்து போகாமல்
குன்றின் மீது ஏற்றிய தீபமாய்
சுடர்விட செய்த
படிக்காத மேதை
கர்ம வீரர் காமராஜ் அவர்களின்
108 வது பிறந்தநாளில்
அவரை நினைவு கூர்வோம் ..!
மரங்கன்று மழையை தரும்
மகராசன் நினைவு நல்ல எதிர்காலம் தரும்
Thursday, July 15, 2010
Saturday, July 3, 2010
நினைவில் நிற்கும் நெசமான தலைவர்... எங்கள் பெருந்தலைவர்
எளிமையின் பிறப்பிடம்
ஏழை பங்காளன் சொல்லின்
இலக்கணம்
ஆண்ட போது இல்லாதது
மண்டைக்கனம்
மாண்ட போது இல்லாதது
மடிக்கணம்
"கிங் மேக்கர் " பட்டம்
புகழ் பெற்றது உன்னாலே
"கர்மவீரர் " பட்டம்
பெற ஆளில்லை உன்பின்னாலே
பூகோளம் படித்தது இல்லை ..நீ !
அணைக்கட்டு ,துறைமுகம் ,
தொழிற்கூடம் துணை கொண்டு
அதற்க்கு அடையாளம் தந்தவன்
சத்திய மூர்த்தியின் சீடரே
சத்திய நெறி தவறாத குனசீலரே
K(amaraj) Plan கொண்டு
கட்சிக்கு காம்ப்ளான் தந்தவர்- அதில்
முதலமைச்சர் பதவியை துறந்து
முன்மாதிரியை திகழ்ந்தாய் ..!
பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்த
முற்பட்ட சிந்தனையாளன்
எதுகை மோனை கவிதை நடை
எதுவும் தெரியாது உனக்கு
"ஆகட்டும் பார்க்கலாம் " என்பாய்
அதை நோக்கி செயல் படுவாய் ..!
கருப்பு காந்தியே ..!
பச்சை தமிழனே ..!
உன் புகழ் பட ஒருவருக்குமில்லை
இங்கு தகுதி
உன்னை மறக்கும் ஊடகங்களும்
இங்கு மிகுதி
வாழ்நாள் முழுவதும்
வாடகை வீட்டில் வசித்தவரே ..!
எங்கள் சிந்தனையிலிருந்து உன்னை
ஏறக்க மாட்டோம் ஒருநாளும் ..
இந்த ஜூலை திங்களில் ..
இறைவா ..! ஒரு வரவேண்டும்
இவர்போல் ஒருவர் பூஉலகுக்கு தர
என பிரத்திக்றோம் ..
Subscribe to:
Posts (Atom)