Saturday, July 3, 2010

நினைவில் நிற்கும் நெசமான தலைவர்... எங்கள் பெருந்தலைவர்




எளிமையின் பிறப்பிடம்

ஏழை பங்காளன் சொல்லின்

இலக்கணம்

ஆண்ட போது இல்லாதது

மண்டைக்கனம்
மாண்ட போது இல்லாதது
மடிக்கணம்

"கிங் மேக்கர் " பட்டம்
புகழ் பெற்றது உன்னாலே
"கர்மவீரர் " பட்டம்
பெற ஆளில்லை உன்பின்னாலே


பூகோளம் படித்தது இல்லை ..நீ !
அணைக்கட்டு ,துறைமுகம் ,
தொழிற்கூடம் துணை கொண்டு
அதற்க்கு அடையாளம் தந்தவன்
சத்திய மூர்த்தியின் சீடரே
சத்திய நெறி தவறாத குனசீலரே
K(amaraj) Plan கொண்டு
கட்சிக்கு காம்ப்ளான் தந்தவர்- அதில்
முதலமைச்சர் பதவியை துறந்து
முன்மாதிரியை திகழ்ந்தாய் ..!

பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்த
முற்பட்ட சிந்தனையாளன்
எதுகை மோனை கவிதை நடை
எதுவும் தெரியாது உனக்கு
"ஆகட்டும் பார்க்கலாம் " என்பாய்
அதை நோக்கி செயல் படுவாய் ..!


கருப்பு காந்தியே ..!
பச்சை தமிழனே ..!
உன் புகழ் பட ஒருவருக்குமில்லை
இங்கு தகுதி
உன்னை மறக்கும் ஊடகங்களும்
இங்கு மிகுதி

வாழ்நாள் முழுவதும்
வாடகை வீட்டில் வசித்தவரே ..!
எங்கள் சிந்தனையிலிருந்து உன்னை
ஏறக்க மாட்டோம் ஒருநாளும் ..
இந்த ஜூலை திங்களில் ..
இறைவா ..! ஒரு வரவேண்டும்
இவர்போல் ஒருவர் பூஉலகுக்கு தர
என பிரத்திக்றோம் ..












2 comments:

  1. நன்று. திரு.நெல்லை பழனி ராஜ் அவர்களே! கர்மவீரர் காமராஜ் புகழ் பாடும் நீவிர் வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துகிறேன். தாங்கள் பிறந்த 1963 ஆண்டுதான் காமராஜ, பதவி வெறும் துண்டுதான் அதை எப்போது வேண்டுமானாலும் வீசி எறிவேன் என்று கூறிக்கொண்டு அதிலேயே ஐயா பதவிப்பிச்சை போடுங்கய்யா
    என்று டெல்லியை நோக்கி பிச்சை எடுக்கும் தமிழ்நாட்டில்,தமிழக முதல்வர் பதவியை விட்டுவிட்டு கட்சிப்பணிக்காகச் சென்றார்.

    ”காமராஜ்” திரைப்படத்தைப்பார்த்துவிட்டு என் மகள் கேட்டாள் “அப்பா இப்படி ஒருபர் நம் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தாரா?”என்ன செய்வது எம்.ஜ்.ஆர், ஜெயலலிதா,கருணாநிதி என்ற ஊழல் பெருச்சாளி ஆட்சியைப்பார்த்த இளைய தலைமுறைக்கு இந்த நேர்மையாளனைப்பற்றி நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  2. தங்கள் பாராட்டு க்கு நன்றி
    ஓர்குட் ல காமராஜ் committee நெறைய எழுதிருக்கேன்

    ReplyDelete