Tuesday, September 11, 2012

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண்)


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு.


கலைஞர் உரை:
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.

மு.வ உரை:
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.

என குத்து மதிப்பு
எரிகின்ற விளக்குக்கு பவர் கட் -வாய்மையில்
ஒளிரும் விளக்குக்கு இல்லை நோஸ் கட்

Monday, May 28, 2012

நான் எழுதுவது ...


*************************

கண்கள் ரெண்டும் கருவண்டு -அது

துளைத்த இதயத்திற்கு சொந்தம் இந்த மண்டு

பின்னிய கூந்தல் கருநாகம் -அது

பின்னவிட்டால் கருமேகம்

கூரிய நகம் பவளம் -அவள்

கூவி அழைக்கும்போது பூபாளம்

வாலியை வசீகரித்த தேகம்

அவள் வாழைத்தண்டு - நான்

வாரி அணைத்தால் அவள் பூச்செண்டு

Tuesday, March 6, 2012

அப்பா




அறியா பருவத்திலும்
அன்னை மீது பாசம் ..
எல்லோருக்கும் உள்ளது -அது
எனக்கு கொஞ்சம் அதிகம்
கோவில் பிரசாதமாகட்டும் ...
குடியரசு தின இனிப்பாகட்டும்
கூட்டுகுடும்பத்தில்
குனிந்த தலை நிமிராத அன்னைக்கு
அப்பாவும் அறியாவண்ணம்
அருகே சென்று தருவாதுண்டாம் ..
சுட்டித்தனத்தை எல்லாம்
சொல்லி சொல்லி மகிழ்வார்
என் தந்தை ...
இன்று என் பிள்ளை
என்னையும் மிஞ்சுகிறான்
தாய் பாசத்தில் ...
வியப்பதற்கென்ன என
வினவத்தோணும்....
என்னுள் என்ன ஊனம் ?
என்னைவிட அவள்மீது
பாசம் ......!
அன்று என் அப்பாவுக்கு
இன்று என்றேன் நிலை எண்ணி
அழத்தோணும்....
அப்பா என்னை தூக்கிவிட்ட
உங்கள் தோள்கள் வேண்டும் ..
என் முகம் புதைத்து நான் அழவேண்டும் ..!

Monday, February 27, 2012

மத நல்லிணக்கம்

தொந்தி பிள்ளையாருக்கு
தோப்புக்கரணம் நூறு போட்டு
பாஸ்மார்க் எடுத்தவனை
விடியலுக்கு முன் எழுப்பி
படிக்கவைத்தது ...
மாதாக்கோவில் மணியோசை ...

Thursday, February 23, 2012

தவம்

உருவெடுத்த தாயின் கருவறையும்
உயர்வு கொடுத்த தந்தையின் தோள்ப்பட்டையும்
கல்வி தந்த குருகுலமும்- என்
நலம்விரும்பிய நட்புபலமும்
என்னில் கலந்த வாழ்க்கை துணையும்
நெஞ்சை நிமிரச்செய்யும் பிள்ளைகளையும்
எள்ளும் குறைவிலா ..
எண்ணற்ற பிறவிகள்
இந்திய மண்ணில்
தமிழனாய் பிறந்திட
தவமிருப்பேன் ....