Monday, February 27, 2012

மத நல்லிணக்கம்

தொந்தி பிள்ளையாருக்கு
தோப்புக்கரணம் நூறு போட்டு
பாஸ்மார்க் எடுத்தவனை
விடியலுக்கு முன் எழுப்பி
படிக்கவைத்தது ...
மாதாக்கோவில் மணியோசை ...

Thursday, February 23, 2012

தவம்

உருவெடுத்த தாயின் கருவறையும்
உயர்வு கொடுத்த தந்தையின் தோள்ப்பட்டையும்
கல்வி தந்த குருகுலமும்- என்
நலம்விரும்பிய நட்புபலமும்
என்னில் கலந்த வாழ்க்கை துணையும்
நெஞ்சை நிமிரச்செய்யும் பிள்ளைகளையும்
எள்ளும் குறைவிலா ..
எண்ணற்ற பிறவிகள்
இந்திய மண்ணில்
தமிழனாய் பிறந்திட
தவமிருப்பேன் ....

Wednesday, November 16, 2011

எழந்த பழம்


இந்தா இந்தா .. இதுபோல்
எழந்த பழம் கண்டதுண்டா ..?
உப்புத் தடவி தாரேன் ..
சப்புக் கொட்டுவே பாரு
காடு புதரில் கனிந்த கனி
கையை காயம் படுத்தி பறித்தது
இந்த கன்னி...
நொறுக்கு தீனிக்கு
நேட்டை வீசும் கனவான்களே..!
எட்டி நின்னு வேடிக்கை வேணாம்
துட்டு நீட்டி வாடிக்கை ஆகணும்

Tuesday, November 1, 2011

Record Breakfast

முந்தானையில் கைதுடைக்கும்
மச்சானின் எச்சம்
மோட்சம் பெறும்...-பின்
அவள் விரல் தொட்டு தரும்
காப்பி டபுள் ஸ்ட்ரங்னது

ஊசிப்போன வடை


கெட்டுப் போன வடையை ஊசிப்போயிட்டு என்கிறோம் அதன் உள்ளே பார்த்தால் நூல் நூலக தெரியும் ஏன் இந்த முரண்பாடு நூலை விட்டு விட்டு ஊசி மட்டும் போனதால் ஊசிப்போன வடை என்கிறோமா ?

Friday, October 14, 2011

பிளையிங் கிஸ்


இருந்த இடத்திலிருந்து
எழுந்து செல்ல முடியாத
ஊனமுற்றவர்களும்
சோம்பேறிகளும் தருவது

Sunday, October 9, 2011

நெஞ்சத்தைக்கிள்ளாதே


தலைவாசல் கோலத்தை
மருதாணியில் பதித்து
தவறாமல் தினமும்
வண்ண மெருகேற்றி- நகத்தை
எப்போதும் கூர்செய்பவளைப்
பார்த்து கூறத்தோன்றியது
"நெஞ்சத்தைக்கிள்ளாதே .."