Wednesday, May 26, 2010

சொக்க தங்கம் தந்தாலும் ...







சொக்க தங்கம் தந்தாலும்
சொந்த ஊரு போல வருமா

பல்லு துலக்குவதற்கு முன்
படுக்கைக்கு போகும் வரை
பக்கத்திலிருந்து வயிறெரிய ஒரு
பங்காளி இங்கே உண்டா..?

ஆடு கறிக்கு அடிசிகிட்டு
கோழிகறிக்கு கூடிக்கொள்ளும்
அண்ணன் தம்பி இங்கே உண்டா ..?


கூட்டான் சோறு கட்டி கொண்டு
குறுக்குதுறை கோவில் போக
தாமிர பரணி ஆறு உண்டா ..?


சம்படம் நெறைய கஞ்சி வெச்சு
சாமண்டி பக்ஸ்ல இல ஊறுகா எடுத்து
நேரம் பார்த்து ஸ்கூலுக்கு போக -ஒரு
நெல்லை எக்ஸ்பிரஸ் இங்கே போறதுண்டா..?

மறுகால் வடியும் அருகன் குளம் -அதன்
மறுகரையில் குளித்து ஈர துணியோடு
கும்மிட்டு மகிழ என் குல தெய்வம்
குலசேகர ராஜா கோவில் உண்டா ..?


அரசமரத்தடியில்
அம்படையன் முடி திருத்தும் போது
முகத்தில் விழும் முடியை
முழுவதும் வெட்ட
அருகே அமர்ந்து
அதிகாரம் பண்ணும் அப்பாவை -நான்
பாத்தாலும் -அவர்
அங்கே கிடைப்பாரா ..?


சொக்க தங்கம் தந்தாலும்
சொந்த ஊரு போல வருமா

5 comments:

  1. நெல்லையை நியாபகப்படுத்திட்டீங்க...

    நல்லாருக்கு..

    ReplyDelete
  2. It is really superb sir... சொந்த ஊரைவிடவும் ஒரு சொர்க்கம் உண்டா?

    ReplyDelete