Tuesday, September 28, 2010

அன்பே கடவுள்

பாதயாத்திரையைபோய்
கால்நடையை காணிக்கையாய்
தந்து பக்தன் வீடு திரும்பும் முன்
தர்மகர்த்தாவின் மாடுதொழுவதில்

கறவைக்கு தயாரானது ...
காணிக்கை காமதேனு

******************************
முடிகாணிக்கை கொடுத்தவன்
தெருக்கோடியில்
காணிக்கை முடியோ ...
கோடியில் புரளும்
சூப்பர் ஸ்டாரின் வழுக்கை தலையில்
*************************
வாரி வழங்கும் வள்ளல்
பரிவட்டம் தலைகாட்டி
கர்ப்பக்கிரகத்தில் ..
வரம் தரும் சாமியோ
பிரம்படியை வாங்க
தருமதரிசனத்தில்

***********
"பாவிகளை மீட்க்க
தேவன் வருகிறான் "
வாசகம் சுமந்த தேவாலயத்தின்
உள்ளே நோக்கினேன்

ஒருவரையும் காணோம்
TARGET ACHIEVED



***********

பாவமன்னிப்பு கூறும்

பாதிரி விடுமுறையில்

பாவம் பாவிகள் ..

சுமைகளோடு ...!

**********

ஆசையை துறக்க

சொன்ன புத்தன்

போதிமரத்தடி நிழலில்

சுகமான சிந்தனையில்

*********

மயிலிறகில் ஏறும்பை

சுமந்து ...

மரத்தடி நிழலில் விட்டு

மார்வாடி சாய்வாக உக்கார்ந்தார்

மாத வட்டி கணக்கு பார்க்க ..


4 comments:

  1. இது என்ன நிலை???

    புலம்பலா..புதிரா...?

    குழப்பமா??

    ஆனாலும் ... ஆந்த எண்ண அலைகள் அருமை.

    கவிதை என்றால் அது தானே.. மனதின் விரிவு...

    ReplyDelete
  2. "அன்பே சிவம்" - எவரும் மறுக்க முடியாத ஒன்றுதான்...

    அதற்கு விளக்கம் தேடி ...

    ஐயோ !!!

    பாவம் ஐயா அந்த புத்தர் ....

    அவரு மேலையும் குத்தம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க...!!!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. உண்மை. புழுக்களிடம் காண்பிக்கும் கருணையை மனிதர்களிடம் காண்பிப்பதில்லை இந்த மார்வாடிகள். தங்கள் சாடல் நியாயமானதே.

    ReplyDelete