பிரமனின் படைப்பே..! என
வியந்த போது - நீ
தேவதையானாய்
உன்விழிபார்வையை சுமக்க
முடியாது -நான்
பலகினமானேன்
நாம் உலாவந்த
இடங்கள் எல்லாம்
சுவர்க்கமானது
தந்தையின் பேச்சுக்கு
நீ இசைந்ததால் -நான்
பைத்தியமானேன்
இந்தவரிகள் நீ
படிக்கும் போது
கவிதையாகும்..நானோ
காவியமகியிருப்பேன்
Friday, November 27, 2009
Wednesday, November 25, 2009
நரை
கமலின்
கர்லிங் ஹேர்..
ரஜினியின்
பரட்டை ஸ்டையில்
எத்தனை உண்டோ
அத்தனையும் பார்த்தாகிவிட்டது
இளமையின் சின்னமே
என் அருமை தலை ரோமமே ..!
வெள்ளிக்கம்பியும்
வெளிவந்தகிவிடது ..
வெளிவுலகம் சொல்லுமுன்
நான் சொல்வேன் என்று
நொந்து போன...
பிஞ்ச சீப்பு சொன்னது
"அங்கிள்" என்று
Tuesday, November 24, 2009
ரசிக்க வேண்டிய விஷ்யம்
ரசிக்க வேண்டிய விஷ்யம்
சின்ன திரை விளம்பரம் ஓன்று
மகள் அலுவல் போக தயாரகுவள்
அவள் உடுத்த வாய்த்த ஜீன்ஸ் பேன்ட்
மடல் என அறியாது.. அதில் உள்ள கிழிசல்களை
அம்மா தைக்க ஆரம்பித்து விடுவாள்
அதுபோல் .. கம்பிளி பூச்சியை பார்த்து அம்மா "ஓ..!" அலற
குட்டி மகனோ .. ஏதும் நடக்காதது போல் அந்த பூச்சியை எடுத்து
பாட்டலில் உள்ள செடியில் பாதுக்காப்பாக எடுத்து விடுவான் ..
இதுபோல் உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் ..
ஏதேனும் இருந்தால் இங்கே பகிர்ந்துகொள்ளலாமே ...
என்னுடைய பகிர்ந்தளிப்பு உண்டு..
வீட்ல என் மனைவி ஜாம் தயாரித்து கொண்டிருதார்கள்
டைனிங் டேபிள் எல்லாம் ஒரே குப்பையாக இருந்தது
எனக்கு எரிச்சல் ..
வேலை செய்வதைவிட
அந்த இடத்தை சுத்தமா வைக்கணும் என்று
உரித்து போட்ட ஆரஞ்சு பழ தோலியை
அள்ளி குப்பை பெட்டியில் போட்டுவிடேன்
kitchesan லிருந்து வந்த என் மனைவிக்கு
ஒரே கோபம் ..
இருக்காத பின்ன அவர்கள்
MARMALADE JAM தயாரிக்க வச்சுயிருந்த
ஆரஞ்சு பழ தோலியை குப்பை என்று சுத்தம் செய்துவிட்டேன்
உரம்
கவி
நாலு வரியில் நாலடியார்
இரண்டு வரியில் திருக்குறள்
ஒரு வரியில் ஆத்துசூடி
ஒரு சொல்லில் நானும் கவியானேன்
உன் பேரு எழுதி....
இரண்டு வரியில் திருக்குறள்
ஒரு வரியில் ஆத்துசூடி
ஒரு சொல்லில் நானும் கவியானேன்
உன் பேரு எழுதி....
நல்ல சமையல்
Monday, November 23, 2009
வியாபார தந்திரம்
கம்யூட்டரில் படிப்பு
கைநெறைய சம்பளம்
அமெரிக்க வேலை..நாம
அருகன்குளம் மாப்பிளைக்கு
நாள் குறிக்க வந்தவரிடம்
சொன்ன சொல்
கனவுகளை சுமந்து
கட்டிலில் இருந்த
காளையிடம்
பால் செம்பினை கொண்டு
பக்கம் வந்த
பாவை சொன்ன சொல்
வாழையிலை போட்டு
வகை வகையாக கறி பரிமாறி
சோறு போடும்
முன் சொன்ன சொல்
என்ன சொல்
"CONDITION APPLY"
கைநெறைய சம்பளம்
அமெரிக்க வேலை..நாம
அருகன்குளம் மாப்பிளைக்கு
நாள் குறிக்க வந்தவரிடம்
சொன்ன சொல்
கனவுகளை சுமந்து
கட்டிலில் இருந்த
காளையிடம்
பால் செம்பினை கொண்டு
பக்கம் வந்த
பாவை சொன்ன சொல்
வாழையிலை போட்டு
வகை வகையாக கறி பரிமாறி
சோறு போடும்
முன் சொன்ன சொல்
என்ன சொல்
"CONDITION APPLY"
Sunday, November 22, 2009
கடவுள் நம்பிக்கை
தலைப்பில் சொல்விட்டேன்
அது இல்லாதவர்கள் படிக்கவேண்டாம்
அது இல்லாதவர்கள் படிக்கவேண்டாம்
எனது பணி கங்கையில் ..மாதமிருமுறை சர்வே செய்வது அப்போது எனக்கு தரப்பட்ட படகில் இருந்தேன்.ரேஷேன் முடிந்துவிட்டது அன்றைய தின பணியும் நிறைவடைந்து விட்டது.சந்தையில் சாமான் வாங்க ஒருகிராமத்தில் படகினை நிறுத்தினோம்.எல்லோரும் சந்தைக்கு சென்று விட்டார்கள் எனக்கு பொழுது போகவில்லை,கங்கை கரையில் evening walking செல்ல தயாரானேன் நவம்பர் மாதமானதால் sweeter மற்றும் மப்புளர் அணித்து நடக்கலானேன்
ஆற்று மணல் வெறும் கால்களில் நடக்க ஆனந்தமாக இருந்தது
ரொம்ப செல்ல முடியவில்லை இருட்ட துவங்கிவிட்டது .
கொஞ்சம் நிற்க
இந்த இடத்தில் கங்கை கரையை பற்றி கொஞ்ச விவரமா சொல்லணும்
உங்களுக்கு ...
நம்ம ஊரு ஆத்துல ஆகாய தாமரை மிதந்து போகும்
இந்த ஆத்துல ஆகயத்துல (மேவுலகம்) போனவன் உடம்பு மிதந்து போகும்
மிதந்து சொல்லும் பிணத்தில் பறவைகள் மட்டுமில்ல நாய் கூட உக்கார்ந்து
கவனிச்சிட்டு கரை ஒதுங்கும்போது இறங்கி போகும்
பிணத்தை எரிக்க வருபவர்கள் கூட பாதி எரித்து அப்படியே கங்கையில்
விடுபவர்கள் உண்டு ..எரிக்காமல் படகில் வைத்து current இருக்குமிடத்தில்
போட்டுவிட்டு போய்விடுவது உண்டு..இதில் வேடிக்கை என்னவென்றல்
பாம்பு கடித்து இறந்தோரை வாழைமர மிதவை செய்து address tag கட்டி விட்டு விடுவதும் உண்டு
விஷம் இறங்கி வீட்டுக்கு திரும்பி வர தான் இந்த ஏற்பாடு ..இப்ப தெரிந்து இருக்கும் நாய் எப்படி மிதக்கும் ஓட்டல் சாப்பாடு சாப்பிடும் என்று ..
ஆக கங்கை கரையில் திரிவும் நாய்க்கூடம் அடர் கட்டில் வசிக்கும் சிங்கம் புலி கரடியை விட எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல..
இப்ப என்னிடத்தில் திரும்ப வாருங்கள்
படகை நோக்கி திரும்பி கொண்டிருந்தேன்
தூரத்திலிருந்தே படகில் எரியும் mast light லிருந்து தெரிந்துவிட்டது
சந்தைக்கு போனவர்கள் திரும்பிவிட்டார்கள் என்று..
உயரமான கரையை கடந்து சரிவில் (slope) இறங்கினேன்
பாதையும் சரியாக இல்லை ..படகுக்கும் எனக்கும் 100 அல்லது 150 மிட்டர் தூரம்.
ஒரு 20 ..30..நாய்களின் கூட்டம் படுத்து கொண்டிருந்தன..
ஒரே ஒரு நாய் மட்டும் எழுந்து நின்று முறுவலித்து தன்மீது உள்ள மணலை உதிர்த்தது..
என்னை கண்டதும் ..உர்..உர்.. என்றது
நானும் பேசாது "என் வழி தனி வழி" என்ன முன்னேறி கொண்டிருந்தேன்
எனது பயம் எனது நடையில் அதுக்கு தெரிந்து விட்டது போலும்
இப்ப அதன் voice ல்ல கொஞ்சம் சுருதி கூடியது
அவ்வளவுதான் .. மகாபாரத்தில் அபிமனுக்கு பிறகு .. எனக்கு அந்த நிலை ஏற்பட்டது.
"வாவ் வாவ்" என்று குறைத்து கொண்டே இன்ச் பை இன்ச் முன்னேறி கொண்டிருந்தன ..சீ தொண்டை கிழிய கத்தி கத்தி பார்த்தேன்
ம்ஹூம் ..ஒரு பலனும் இல்லை
இதற்க்கு முன் கங்கை நதிக்கரையில் ஒதிங்கி கிடந்த சடலங்கள் ஒரு நிமிடம் என் மனகண்ணில்
வந்து போயின.
எனது கருப்பு கலர் ஜாக்கெட் அவைகளுக்கு மிகவும் பயங்கரமாக தோன்றியிருக்க வேண்டும். தோளில் கிடந்த மப்ளர் எடுத்து சுத்தி சுத்தி சுழற்றி சீ..சீ தொண்டை கிழிய கத்தி கத்தி பார்த்தேன் ம்..ம்ஹூம்
கரையில் சரிவில் இந்த கூத்து நடந்து கொண்டிருதது கால் நழுவி கிழே விழுந்து உருண்டு படகு அருகே வந்து விட்டேன்
சந்தைக்கு போனவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள். generator set ஓடும் சத்தம் நான் கத்துவது அவர்களுக்கு கேட்டவில்லை.
ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்
ஒரு நாய் என் மீது ரத்த கோரை ஏற்படுத்தினாலும்
மற்றவை எல்லாம் pizza பார்சல் எண்ணி என்னை "முடித்து விட்டு" போயிடும்
கண்ணை முடிக் கொண்டேன். ஆறு மதத்திற்கு முன் இறந்த தந்தையை நினைத்தேன்.அவர்கள் வருடம் தோறும் பாதயாத்திரை போகும் திருசெந்தூர் முருகனை நினைத்துகொண்டு ...
அடிவயிதில்லிருந்து அழுத்தத்தை கொடுத்து தொண்டை கிழிய
"மு......ரு.....கா......" கத்தினேன்.. ஒரு முறைதான் கத்தினேன் ..
அந்த ஒரு சொல் ..
அவ்வளவுதான் ...மெமோரி லாஸ் அனா கஜினி மாதிரி
திரும்ப போய்விட்டன இப்ப இந்த நிகழ்ச்சியை typing போது எனக்கு மயிர் கால்கள் விரைப்பாக நிற்பதை நீங்கள் உணர முடிகிறதா இல்லையா என்பது எனக்கு தெரிய வில்லை
எனக்கு கடவுள் இருக்கிறார் என்பது எனக்கு நன்றாக அன்றையிலிருந்து தெரிய ஆரம்பித்துவிட்டது
Thursday, November 19, 2009
சகலகலா வல்லவன்
"கதையில்லாமல் படமெடுப்போர்
கணகற்றோர்...
action தெரியாமல்
editing புண்ணியத்தில்
action hero ஆனோர் எண்ணற்றோர்
அரசியல் அறிக்கைளில்
அவற்றை துக்கிபிடிதோர் பலர்
உடகங்களின் ஊக்கத்தில்
அரியணை கனவில் சிலர்
நீயோ ..
வசனமில்லாது படமெடுத்து
பேசும்படம் என்று அகிலத்தை
பேச வைத்தாயே..
இசையே இல்லாமல்
பாடல் அமைத்து தளம் போடவைதவன்
அவ்வை சண்முகி
அப்பு ராஜா
இன்னும் எத்தனையோ இருக்கு ...
திரையில் நீ சிந்தும் வேர்வை
பவுனிலும் மேலான ரசிகர்களை பெற்று தந்தது
..............சுருங்க சொல்லின்
கற்று வாங்க கடற்கரை செல்பவன்
கடலையும் வாங்குவன்
கலை நிகழ்ச்சியும் பார்ப்பான்
கடலை பொட்டலம்
குப்பைக்கு செல்லும்
கலை நிகழ்ச்சி
நினைவலையில் மிதந்து வரும்..
கணகற்றோர்...
action தெரியாமல்
editing புண்ணியத்தில்
action hero ஆனோர் எண்ணற்றோர்
அரசியல் அறிக்கைளில்
அவற்றை துக்கிபிடிதோர் பலர்
உடகங்களின் ஊக்கத்தில்
அரியணை கனவில் சிலர்
நீயோ ..
வசனமில்லாது படமெடுத்து
பேசும்படம் என்று அகிலத்தை
பேச வைத்தாயே..
இசையே இல்லாமல்
பாடல் அமைத்து தளம் போடவைதவன்
அவ்வை சண்முகி
அப்பு ராஜா
இன்னும் எத்தனையோ இருக்கு ...
திரையில் நீ சிந்தும் வேர்வை
பவுனிலும் மேலான ரசிகர்களை பெற்று தந்தது
..............சுருங்க சொல்லின்
கற்று வாங்க கடற்கரை செல்பவன்
கடலையும் வாங்குவன்
கலை நிகழ்ச்சியும் பார்ப்பான்
கடலை பொட்டலம்
குப்பைக்கு செல்லும்
கலை நிகழ்ச்சி
நினைவலையில் மிதந்து வரும்..
Wednesday, November 18, 2009
இந்த நாடு பார்த்துண்டா..?
எனக்கு நடந்த உண்மை நிகழ்ச்சியை சொல்கிறேன்
எனக்கு தலைவர் காமராஜ் என்றால் உயிர்
என் profile யை பார்பவர்களுக்கு அது புரியும் ..
இணைய தளததில் தலைவரை பற்றிய செய்திகள்
சேகரித்து கொண்டிருந்தேன் ..
உடன் பணியாற்றும்
வட இந்தியர் தலைவரின் புகை படத்தை
பார்த்து ஹிந்தியில் அவர் சொன்னது
எனக்கு கண்ணில் நீர் வர வைத்துவிட்டது
" இது அந்த மாதரசி தலைவர் அல்லவா.. செத்த பிறகு ஐந்து ஆறு வேஷ்டி தவிர இவர் விட்டில் ஒண்ணுமில்லை "
இப்ப சொல்லுங்க
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்துண்டா ..
இந்த மாபெரும் அவதார புருஷனை
இந்த நாடு பார்த்ததுண்டா "
Tuesday, November 17, 2009
கமல் பிறந்த நாள் வாழ்த்து
நாளெலாம் மலரும் மலர்கள்
நறுமணம் மறந்து கமழ்கிறது
நமவரின் புகழ்
மதுவுண்ட தேன் வண்டோ
நாயகனின் பேர் ரீங்கரிக்கிறது
உலகமெல்லாம் உள்ள மொழிகளில்
உலகநாயகனின் பேர் மட்டும் ஓலிக்கிறது
"Kamal ...كمال কামাল કમળ कमल
ಕಮಲ್ കമല് ਕਮਾਲ கமல்..."
நான் சொன்ன கேளு..
இது நவம்பர் ஏழு
நறுமணம் மறந்து கமழ்கிறது
நமவரின் புகழ்
மதுவுண்ட தேன் வண்டோ
நாயகனின் பேர் ரீங்கரிக்கிறது
உலகமெல்லாம் உள்ள மொழிகளில்
உலகநாயகனின் பேர் மட்டும் ஓலிக்கிறது
"Kamal ...كمال কামাল કમળ कमल
ಕಮಲ್ കമല് ਕਮਾਲ கமல்..."
நான் சொன்ன கேளு..
இது நவம்பர் ஏழு
Monday, November 16, 2009
தூக்கு தண்டனை
Saturday, November 14, 2009
பாதங்கள்
Thursday, November 12, 2009
என் அனுபவம்
அப்ப நான் (1993) அந்தமானிலிருந்து டெல்லி appointment இல வந்தேன் ..அங்கே மரமும் செடியும் பார்த்து பழகிப்போன எனக்கு இங்கே போக்குவராதை பார்த்தால் உதறல் எடுத்தது இறங்கே வேண்டிய stop வரும் முன் இறங்கி நடந்து வருவது இல்லையேல் பிறக்கு இறங்கி திரும்பி வருவது உண்டு..ஒருநாள் நானும் எனது மேலதிகாரிவும் ministry க்கு போனோம் அவரோ நான் வர லேட் ஆகும் நீ வேறு இங்கிருந்து bus இல போய்விடு என்றார். பாராளுமன்றம் அருகே .. நொய்டா வரணும் bus rout No. 300. "சார் நொய்டா செல்லும் bus வருமா? என்று (ஹிந்திஇல)ஓவ்வோருவரிடமாக வழி கேட்டேன் 300 stop எங்கே என்று யாரும் தெரியவில்லை என்றுவிட்டார்கள் ..தட்டு தருமாரி படேல் பவன் அருகே வரை வந்துவிட்டேன்..அங்கே ஒரு நபர் நிற்று கொண்டிருந்தார் ..அவரிடம் "சார் நொய்டா செல்லும் bus வருமா? என்றேன் (ஹிந்திஇல)"அவர் என்ன சொன்னார் தெரியுமா ..?
இப்பத்த பார்லிமென்ட் ஸ்ட்ரீட் இல்ல வைத்து எனக்கு தெரியாதுன்னு சொன்னேன்..அதுக்குள்ள படேல் பவன் கிட்ட வந்து திரும்ப கேட்கிற...நீ என்ன நினச்ச உனக்கு பஸ் route சொல்ல பார்லிமென்ட் ஸ்ட்ரீட் லிருந்து படேல் பவன் வந்தேன்னு நெனசயா ..?
இப்பத்த பார்லிமென்ட் ஸ்ட்ரீட் இல்ல வைத்து எனக்கு தெரியாதுன்னு சொன்னேன்..அதுக்குள்ள படேல் பவன் கிட்ட வந்து திரும்ப கேட்கிற...நீ என்ன நினச்ச உனக்கு பஸ் route சொல்ல பார்லிமென்ட் ஸ்ட்ரீட் லிருந்து படேல் பவன் வந்தேன்னு நெனசயா ..?
என் அனுபவம்
அப்ப நான் ஆபீஸ் வேலை காரணமாக கொச்சி சென்றேன் எல்லோரும் என்னிடம் இவ்வளவு தூரம் வந்துட்டு குருவாயூர் தர்சிக்காமல் போனால் நல்ல இல்லை என்றாகள் நானும் ரூம் பாய் இடம் என்னை காலை ஐந்து மணிக்கு எழுப்ப சொல்லிவிட்டு இரவு பத்து மணிக்கு படுக்க சென்றேன்...நான் தங்கி இருந்த லாட்ஜ் railway station அருகேதான் இருந்தது.காலை 6 மணிக்கு train.. நல்ல ஆழ்ந்த உறக்கம் திடீர் என்று கதவு "டப் டப்" என்று சத்தம்.கதவு திறந்து பார்த்தால் ரூம் பாய் நன்றாக குடித்திருந்தான்..தொடர்கிறது என்னை எழுப்பிவிட்டு அவன் போய்விட்டன் எனக்கு நல்ல தூக்க கலக்கம் பாதி தூக்கத்தில் மேசைமீது உள்ள கடிகாரத்தை பார்த்தேன் ஐந்து ஆக ஐந்து நிமிடம் எண்ட குருவாயுரப்பா ..!ஆறு மணிக்கு train அவசர அவசரமாக குளித்து விட்டு இஸ்திரி செய்த பேன்ட் சர்ட் அணிந்தேன் ஜன்னல் கதவுகளை மூடினேன் அறை கதவுகளை மூடுவதற்கு முன் கட்டிலுக்கு கிழே புகை வரவதை கவனித்தேன் ஆம் அது கொசுவர்த்தில்லிருது வந்து கொண்டு இருந்தது ..அறை கதவுகளை மூடிவிட்டு என்னடா இது இரவு முழுக்கும் எரித்து கொண்டிருக்கும் கொசு வர்த்தி முழுசா எப்படி காலைவரை இருக்க முடியும் ..? எனக்கு இன்னும் துக்க கலக்கம் திரவில்லை...எங்கேயோ உதைகிறதே என்று திரும்ப கையில் கட்டிய வாட்ச்யா பாத்தேன் அட கடவுளே ..இரவு 12.30 மணி அந்த குடிகார பய எழுபிவிட்டு நானும் தூக்க கலக்கத்தில் இரவு 11.30 மணியை காலை ஐந்து ஆக ஐந்து நிமிடம் என்று தவறுதலாக பார்த்து இருக்கிறேன்
Subscribe to:
Posts (Atom)