
அப்ப நான் ஆபீஸ் வேலை காரணமாக கொச்சி சென்றேன் எல்லோரும் என்னிடம் இவ்வளவு தூரம் வந்துட்டு குருவாயூர் தர்சிக்காமல் போனால் நல்ல இல்லை என்றாகள் நானும் ரூம் பாய் இடம் என்னை காலை ஐந்து மணிக்கு எழுப்ப சொல்லிவிட்டு இரவு பத்து மணிக்கு படுக்க சென்றேன்...நான் தங்கி இருந்த லாட்ஜ் railway station அருகேதான் இருந்தது.காலை 6 மணிக்கு train.. நல்ல ஆழ்ந்த உறக்கம் திடீர் என்று கதவு "டப் டப்" என்று சத்தம்.கதவு திறந்து பார்த்தால் ரூம் பாய் நன்றாக குடித்திருந்தான்..தொடர்கிறது என்னை எழுப்பிவிட்டு அவன் போய்விட்டன் எனக்கு நல்ல தூக்க கலக்கம் பாதி தூக்கத்தில் மேசைமீது உள்ள கடிகாரத்தை பார்த்தேன் ஐந்து ஆக ஐந்து நிமிடம் எண்ட குருவாயுரப்பா ..!ஆறு மணிக்கு train அவசர அவசரமாக குளித்து விட்டு இஸ்திரி செய்த பேன்ட் சர்ட் அணிந்தேன் ஜன்னல் கதவுகளை மூடினேன் அறை கதவுகளை மூடுவதற்கு முன் கட்டிலுக்கு கிழே புகை வரவதை கவனித்தேன் ஆம் அது கொசுவர்த்தில்லிருது வந்து கொண்டு இருந்தது ..அறை கதவுகளை மூடிவிட்டு என்னடா இது இரவு முழுக்கும் எரித்து கொண்டிருக்கும் கொசு வர்த்தி முழுசா எப்படி காலைவரை இருக்க முடியும் ..? எனக்கு இன்னும் துக்க கலக்கம் திரவில்லை...எங்கேயோ உதைகிறதே என்று திரும்ப கையில் கட்டிய வாட்ச்யா பாத்தேன் அட கடவுளே ..இரவு 12.30 மணி அந்த குடிகார பய எழுபிவிட்டு நானும் தூக்க கலக்கத்தில் இரவு 11.30 மணியை காலை ஐந்து ஆக ஐந்து நிமிடம் என்று தவறுதலாக பார்த்து இருக்கிறேன்
No comments:
Post a Comment