Sunday, November 22, 2009

கடவுள் நம்பிக்கை



தலைப்பில் சொல்விட்டேன்
அது இல்லாதவர்கள் படிக்கவேண்டாம்

எனது பணி கங்கையில் ..மாதமிருமுறை சர்வே செய்வது அப்போது எனக்கு தரப்பட்ட படகில் இருந்தேன்.ரேஷேன் முடிந்துவிட்டது அன்றைய தின பணியும் நிறைவடைந்து விட்டது.சந்தையில் சாமான் வாங்க ஒருகிராமத்தில் படகினை நிறுத்தினோம்.எல்லோரும் சந்தைக்கு சென்று விட்டார்கள் எனக்கு பொழுது போகவில்லை,கங்கை கரையில் evening walking செல்ல தயாரானேன் நவம்பர் மாதமானதால் sweeter மற்றும் மப்புளர் அணித்து நடக்கலானேன்
ஆற்று மணல் வெறும் கால்களில் நடக்க ஆனந்தமாக இருந்தது
ரொம்ப செல்ல முடியவில்லை இருட்ட துவங்கிவிட்டது .
கொஞ்சம் நிற்க
இந்த இடத்தில் கங்கை கரையை பற்றி கொஞ்ச விவரமா சொல்லணும்
உங்களுக்கு
...


நம்ம ஊரு ஆத்துல ஆகாய தாமரை மிதந்து போகும்
இந்த ஆத்துல ஆகயத்துல (மேவுலகம்) போனவன் உடம்பு மிதந்து போகும்
மிதந்து சொல்லும் பிணத்தில் பறவைகள் மட்டுமில்ல நாய் கூட உக்கார்ந்து
கவனிச்சிட்டு கரை ஒதுங்கும்போது இறங்கி போகும்
பிணத்தை எரிக்க வருபவர்கள் கூட பாதி எரித்து அப்படியே கங்கையில்
விடுபவர்கள் உண்டு ..எரிக்காமல் படகில் வைத்து current இருக்குமிடத்தில்
போட்டுவிட்டு போய்விடுவது உண்டு..இதில் வேடிக்கை என்னவென்றல்
பாம்பு கடித்து இறந்தோரை வாழைமர மிதவை செய்து address tag கட்டி விட்டு விடுவதும் உண்டு
விஷம் இறங்கி வீட்டுக்கு திரும்பி வர தான் இந்த ஏற்பாடு ..இப்ப தெரிந்து இருக்கும் நாய் எப்படி மிதக்கும் ஓட்டல் சாப்பாடு சாப்பிடும் என்று ..
ஆக கங்கை கரையில் திரிவும் நாய்க்கூடம் அடர் கட்டில் வசிக்கும் சிங்கம் புலி கரடியை விட எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல..

இப்ப என்னிடத்தில் திரும்ப வாருங்கள்
படகை நோக்கி திரும்பி கொண்டிருந்தேன்
தூரத்திலிருந்தே படகில் எரியும் mast light லிருந்து தெரிந்துவிட்டது
சந்தைக்கு போனவர்கள் திரும்பிவிட்டார்கள் என்று..
உயரமான கரையை கடந்து சரிவில் (slope) இறங்கினேன்
பாதையும் சரியாக இல்லை ..படகுக்கும் எனக்கும் 100 அல்லது 150 மிட்டர் தூரம்.
ஒரு 20 ..30..நாய்களின் கூட்டம் படுத்து கொண்டிருந்தன..
ஒரே ஒரு நாய் மட்டும் எழுந்து நின்று முறுவலித்து தன்மீது உள்ள மணலை உதிர்த்தது..
என்னை கண்டதும் ..உர்..உர்.. என்றது

நானும் பேசாது "என் வழி தனி வழி" என்ன முன்னேறி கொண்டிருந்தேன்
எனது பயம் எனது நடையில் அதுக்கு தெரிந்து விட்டது போலும்
இப்ப அதன் voice ல்ல கொஞ்சம் சுருதி கூடியது
அவ்வளவுதான் .. மகாபாரத்தில் அபிமனுக்கு பிறகு .. எனக்கு அந்த நிலை ஏற்பட்டது.
"வாவ் வாவ்" என்று குறைத்து கொண்டே இன்ச் பை இன்ச் முன்னேறி கொண்டிருந்தன ..சீ தொண்டை கிழிய கத்தி கத்தி பார்த்தேன்
ம்ஹூம் ..ஒரு பலனும் இல்லை
இதற்க்கு முன் கங்கை நதிக்கரையில் ஒதிங்கி கிடந்த சடலங்கள் ஒரு நிமிடம் என் மனகண்ணில்
வந்து போயின.
எனது கருப்பு கலர் ஜாக்கெட் அவைகளுக்கு மிகவும் பயங்கரமாக தோன்றியிருக்க வேண்டும். தோளில் கிடந்த மப்ளர் எடுத்து சுத்தி சுத்தி சுழற்றி சீ..சீ தொண்டை கிழிய கத்தி கத்தி பார்த்தேன் ம்..ம்ஹூம்
கரையில் சரிவில் இந்த கூத்து நடந்து கொண்டிருதது கால் நழுவி கிழே விழுந்து உருண்டு படகு அருகே வந்து விட்டேன்
சந்தைக்கு போனவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள். generator set ஓடும் சத்தம் நான் கத்துவது அவர்களுக்கு கேட்டவில்லை.
ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்
ஒரு நாய் என் மீது ரத்த கோரை ஏற்படுத்தினாலும்
மற்றவை எல்லாம் pizza பார்சல் எண்ணி என்னை "முடித்து விட்டு" போயிடும்
கண்ணை முடிக் கொண்டேன். ஆறு மதத்திற்கு முன் இறந்த தந்தையை நினைத்தேன்.அவர்கள் வருடம் தோறும் பாதயாத்திரை போகும் திருசெந்தூர் முருகனை நினைத்துகொண்டு ...
அடிவயிதில்லிருந்து அழுத்தத்தை கொடுத்து தொண்டை கிழிய
"மு......ரு.....கா......" கத்தினேன்.. ஒரு முறைதான் கத்தினேன் ..
அந்த ஒரு சொல் ..

அவ்வளவுதான் ...மெமோரி லாஸ் அனா கஜினி மாதிரி
திரும்ப போய்விட்டன இப்ப இந்த நிகழ்ச்சியை typing போது எனக்கு மயிர் கால்கள் விரைப்பாக நிற்பதை நீங்கள் உணர முடிகிறதா இல்லையா என்பது எனக்கு தெரிய வில்லை
எனக்கு கடவுள் இருக்கிறார் என்பது எனக்கு நன்றாக அன்றையிலிருந்து தெரிய ஆரம்பித்துவிட்டது


2 comments:

  1. நெல்லை பழனிராஜ் அவர்களுக்கு வணக்கம்,

    உங்களின் மேற்கண்ட வரிகளை யார் நம்புகிறார்களோ இல்லையோ ஆனால் நான் முழுவதுமாக அடி மனதின் ஆழத்திலிருந்து நம்புகிறேன். கடவுள் என்கிற வார்த்தையினை கடம் + உள் என்று கூறும் பகுத்தறிவு வாதிகள் ஆனாலும் சரி இல்லை அவ்வாறு ஒருவர் இருக்கிறார் என்று நம்பும் ஆன்மிக வாதிகள் ஆனாலும் சரி. நம்பிக்கை என்று வந்தபின் பிறகு சந்தேகங்கள் கூடாது,உங்களது நம்பிக்கையினை நான் மதிக்கிறேன் கடவுள் நம் கூடவே இருக்கிறார் என்பதை ஓரளவு உணர்ந்தவனும் கூட, " நம்பினார் கெடுவதில்லை" இது நான் மறை தீர்ப்பு முருகப் பெருமான் உங்கள் கூடவே இருந்து காப்பாராக - திருச்செந்தூர் முருகனை நினைத்தாலே எமக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கும் அவ்வளவு சக்தி வாய்ந்த எம்பெருமான் அனைவரையும் காக்கட்டும்.

    "நமசிவாய"

    ReplyDelete
  2. " நம்பினார் கெடுவதில்லை" இது நான் மறை தீர்ப்பு. enpathai ungal blog moolam therinthu konden.. முருகப் பெருமான் உங்கள் கூடவே இருந்து காப்பாராக...

    ReplyDelete