கம்யூட்டரில் படிப்பு
கைநெறைய சம்பளம்
அமெரிக்க வேலை..நாம
அருகன்குளம் மாப்பிளைக்கு
நாள் குறிக்க வந்தவரிடம்
சொன்ன சொல்
கனவுகளை சுமந்து
கட்டிலில் இருந்த
காளையிடம்
பால் செம்பினை கொண்டு
பக்கம் வந்த
பாவை சொன்ன சொல்
வாழையிலை போட்டு
வகை வகையாக கறி பரிமாறி
சோறு போடும்
முன் சொன்ன சொல்
என்ன சொல்
"CONDITION APPLY"
இன்றும் ஏன் இதே நிலை தொடர்கிறது ?........
ReplyDelete