கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
கலைஞர் உரை:
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.
மு.வ உரை:
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.
குத்து மதிப்புரை
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
கேடு வரும் முன்னே மதி கெட்டு வரும் முன்னே
//அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்// அப்படின்னா, கலைஞருக்குத் தான் கெட்டழியப் போகிறோம் என்று தெரிந்ததா தெரியவில்லையா? அவர் இன்னும் கெட்டழியாமல் இருப்பதற்குக் காரணம் அவர் நடுவுநிலைமையோடு செயற்படுகிறார் என்று அர்த்தமா? //கேடு வரும் முன்னே மதி கெட்டு வரும் முன்னே// "கேடு வரும் பின்னே" என்றுதானே இருக்கவேண்டும். குத்துமதிப்புதானே, கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம் அப்படின்னு வுட்டுட்டீங்களா? :))
ReplyDelete