Monday, January 10, 2011

குறளும் குத்து மதிப்பும் (குறள் 279)

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
கலைஞர் உரை:
நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.
மு.வ உரை:
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.

என் குத்து மதிப்புரை

நிமிர்த்து பார்க்கும் நிலையில் இருந்தாலும் கொம்புநெஞ்சியில் முட்ட குருதி வரும் ...
குனிந்து பார்க்கும் நெலமையில் இருந்தாலும் காம்பு
வயிறு முட்ட (பசியாற ) பால் தரும் ....


5 comments:

  1. கொம்பு காம்பு எதுகையுடன் அமைந்த நல்ல சிந்தனை.

    ReplyDelete
  2. வண்ணம் தீட்டினாலும் கொம்பு நெஞ்சில் முட்டும்
    சாணம் ஒட்டினாலும் காம்பு வாயித்தை முட்டும்

    ReplyDelete
  3. எது எது என்ன என்ன தரும் என்பதை விட்டு விட்டு, உன் எழுத்துக்கள் தரும் இன்பத்தினை நினைக்கிறேன். அவற்றுள் நனைகிறேன். எழுது, எல்லோரும் இன்புற இன்னமும் எழுது.
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete