Saturday, February 13, 2010

குறளும் குத்து மதிப்பும் குறள் 1108:

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.


கலைஞர் உரை:
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.


மு.வ உரை:

காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.


சாலமன் பாப்பையா உரை:

இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.


பழனிராஜியின் குத்து மதிப்பு
ஓகோ ..

மெட்ரோ ரெயில்லயும் ..
சிட்டி பஸ்லையும் -எழுந்து
இருக்கை தந்தாலும்
இருக்க மறுத்து
மறந்த நிலையில
பேசிக்கொண்டு இருக்கிறார்களே ..?
இதுதான் விஷயமா ..?
உயரமான வள்ளுவன் சிலையை
ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
மெரினா கடற்கரையில் நிறுவியிருக்க வேண்டும் ..
கீழே நடக்கும் இந்த விசயங்கள்
நெறைய எழுதி இருப்பார்

No comments:

Post a Comment