காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
* மு.வ : என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!
* சாலமன் பாப்பையா : என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.
குத்து மதிப்பு:
பாவம் அந்த பையன் ..!
பதவி உயர்வு இல்லை என்று
மறந்தாப்ல உன் வீட்டுக்கு
மறுபடிவும் வந்துவிட்டால் ...
காதல் என்று
கணக்கு போடுவது
என்ன நியாயம் ..?
சேல்ஸ் மேனுக்கு
சிரித்த முகம் தானே மூலதனம் ..
இதை அறியாதது உன் மூடத்தனம்
சேல்ஸ் மேனுக்கு
ReplyDeleteசிரித்த முகம் தானே மூலதனம் ..
இதை அறியாதது உன் மூடத்தனம்
///
அருமை!! புதிய யுக்தியாக உள்ளதே!!
மிக்க நன்றி
ReplyDelete