Sunday, January 31, 2010

குறளும் குத்துமதிப்பும் (குறள் எண் :478)

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.


* மு.வ : பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

* சாலமன் பாப்பையா : வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

குத்து மதிப்புரை by பழனி ராஜ் : வங்கி கணக்கில் இருப்பு இல்லாத போது "ATM ..OUT OF SERVICE " என்றல் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண் : 50)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

குத்து மதிப்பு
***************
பூக்களை தொடுக்க நார் வேணும்
தங்கத்தை இழைக்க தாமிரம் வேணும் .. ஆனால்
இந்த குறளும் குத்துமதிப்பு எழுத வார்த்தைகளே வேணாம்
அந்த மனிதர்களில் மாணிக்கங்களை கூறுகிறேன்

மதிப்புரை தேவையில்லை
கு. காமராஜ் , ஜீவா ,கக்கன், அன்னை தெரசா, அப்துல் கலாம், இன்னும் பல

குறளும் குத்துமதிப்பு (குறள் எண் : 69)

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

கலைஞ்சர் .மு. கருணாநிதி :நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

சாலமன் பாப்பையா :தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்

குத்து மதிப்பு
எத்தனையோ ஜட்டி
ஈரமாக்கிய உடனேயே மாத்தி
கொஞ்சி மகிழ்ந்த குழந்தைக்கு
உடுத்த மாத்து இல்லாது -இப்ப
ஒரே ஜட்டியில் ஊரெல்லாம்
சுற்றி வரும் நிலையிலும்
ஆனந்த கண்ணீர் வடிக்கும்
..................................தாய்..
சூப்பர் மெனின் தாய்

Saturday, January 30, 2010

குறளும் குத்து மதிப்பும் (எண் ; 1033 )

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

குத்து மதிப்பு

வான் மேகம்
இவனின் Top Boss
வரப்பு வயலெல்லாம்
இவனின் Desk Top
ஏர்முனை கொண்டு
இவன் எழுதும் system
விண்டோஸ் ஐ மிஞ்சும்
Operating Sytem

ப. பழனி ராஜ்

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண்: 70)

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ‘இவன் தந்தை
என் நோற்றான் கொல்’ எனும் சொல்.
குத்து மதிப்பு
"புகை"யுமில்லை இவனுக்கு "பகை'யுமில்லை
"தண்ணி'யுமில்லை எந்த "கன்னி"யுமில்லை
இவன் தலையெடுக்க ஆரபிச்ச பிறகு
இவன் அப்பகாரன் தலை நிமிர ஆரபிச்சன்னு
உன் பங்காளி வயிறு எரியணும்...
ப. பழனி ராஜ்

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண்: 595)

வெள்ளத்தனைய மலர் நீட்டம்
மாந்தர்தம் உள்ளத்தனையதுயர்வு.
குத்து மதிப்பு
கம்யூட்டர் என்னும் கணனி நம் வாழ்வில் கலந்துவிட்ட ஒரு அங்கமாகிவிட்ட வேளையில் இந்த இணைய தளத்திற்கு ஏற்றவாறு ஒரு கருத்து சொல்லணும் ..கணனி உள்ளே இருக்கும் RAM மதிப்பும் எவ்வளவு உயர்தோ அவ்வளவு உங்கள் கணனி சிறப்பா இருக்கும் modem bitrate எவ்வளவு உயர்தோ அவ்வளவு உங்கள் internet சிறப்பா இருக்கும்

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண்: 100)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

குத்து மதிப்பு
திரைக்கு வந்தே சில மாதமான
பார்க்காத படத்தை
பக்கத்தில் அமர்ந்து பார்க்க
இல்லத்தரசி அழைத்த போது
இல்லை என்று சொன்னவர் மனம்
டிஸ்கவரி சேனலை
டிஸ்கஸ் பண்ணிக்கொண்டே
கூப்பிடாத கொழுதியா கூட அமர்ந்து
சின்னத்திரை பார்க்க நினைப்பது போன்றது

Thursday, January 28, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 621 )

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்

மு.வ : துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

சாலமன் பாப்பையா : நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.

பழனி ராஜ்: இல்லத்தரசி புதிதாக ஒரு பலகாரம் செய்து எடுத்து வந்தாலோ அல்லது இல்லத்தரசியின் இளைய வேலை வெட்டி இல்லா சகோதரன் வீட்டுக்கு வந்தாலோ நீங்க செய்யவேண்டியது .." அடட..ரொம்ப நாளைக்கு அப்புறம் ..!" என்று புன்முறுவலோடு வரவேற்க்கவேண்டும்..வரக்கூடிய வினை (கோளாறு) வந்தே தீரும் உங்க வயித்துக்கும் மணி பர்சுக்கும் .......இல்லையேல் எதிர்வினை இன்னும் கடுமையாக இருக்கும்

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 423 )

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

மு.வ : எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா : எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

பழனி ராஜ் : "அண்ணாச்சியின் கட்சி நிர்வாகத்தை தலைவர் பாராட்டினால் ஆட்சியில் அவருக்கு இடம் இல்லை" என்றும்
'இந்த முறை கூட்டணி கட்சிக்கு அதிக இடம்" என்றால் .."அவர்கள் ஜெயிக்க வாய்ப்பு உள்ள தொகுதிகள் எல்லாம் தன்கட்சிக்கு" என்றும் பொருள் ..வெறுமன தலைப்பு செய்தியை மட்டும் பார்க்க கூடாது உறைக்கு உள்ளே உறைந்து கொண்டிருக்கும் பொருளையும் ஆராய வேணும் ..!

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 467 )

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு.

மு.வ : (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

பழனி ராஜ் : பயணம் தொடங்குமுன் பையில் இருப்பது பயண சீட்டா பிளாட்பாரம் டிக்கட்டா....பார்த்துட்டு வண்டி ஏறணும்..வீடோட மாப்பிளையாக இருந்தது போதும் ன்னு வண்டி ஏறுன பிறகு பார்த்துக்கிடலாம்னு வண்டி ஏறினால்..மவனே ..! ஒரு மாமியார் வீட்டை விட்டு இன்னொரு மாமியார் வீட்டை போயி சேரவேண்டியது வந்தவிடும்

Tuesday, January 26, 2010

குறளும் குத்து மதிப்பும்-( குறள் எண் : 108 )

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.


மு.வ : ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

சாலமன் பாப்பையா : ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்

பழனி ராஜ் : எந்த பஸ்ல ஏறினாலும் முந்தின பஸ்ல இருக்க இருக்கை தந்த எல்லோரையும் நினைவில் கொள்ள வேண்டும் ..அதே சமயம் இந்த பஸ்ல பின் படிக்கட்டில இடிசுகிட்டு ஏறுனவன் முகத்தை முன்படிகட்டு இறங்கி முடிக்கும் முன்பே மறக்கணும்

குறளும் குத்து மதிப்பும்-( குறள் எண் : 15 )

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை


மு.வ : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்

சாலமன் பாப்பையா : பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்

பழனி ராஜ் : மும்மாரி பெய்தால் முல்லைக்கு தேர் கொடுப்பன் பாரி ...அது முடியாது போனால் எங்கும் கூக்குரல்கள் கேட்பான் பாரீ..!

குறளும் குத்து மதிப்பும்-( குறள் எண் : 948 )

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

மு.வ : நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

சாலமன் பாப்பையா : நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.

பழனி ராஜ்: தும்பை விட்டுட்டு வாலை பிடிக்க வோணாம்.....!இப்பவாவது புரிஞ்சுதா ? டாக்டர் நோயாளியிடம் "ஆ காட்டு " ன்னு ஏன் ..சொல்றார் ..? நோயின் முதல் நாடி வாய் அதை கட்டுபடுத்திவிட்டாலே (உணவு கட்டுப்பாடு ) பாதி நோய் காணாமபோயிடும்..

Monday, January 25, 2010

குறளும் குத்து மதிப்பும் -( குறள் எண் : 259 )

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.



மு.வ : நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா : (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

பழனி ராஜ் : சிக்கன் சாப்பிடாமல் ஊயிரை சித்தரவதை செய்யாது இருந்தால் மார்கழி மாதம் முழுவதும் குளிரில் கோவிலுக்கு செல்வதைகாட்டிலும் சிறந்தது

Sunday, January 24, 2010

குறளும் குத்து மதிப்பும் -( குறள் எண் : 314 )

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்
நாணநன்னயஞ் செய்து விடல்.



மு.வ : இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

சாலமன் பாப்பையா : நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே

பழனி ராஜ் : வேட்டியை உறுவினவனுக்கு அதாலே பொன்னாடை போர்த்தி நாணமடைய செய்துவிட வேண்டும்

Thursday, January 21, 2010

பிஞ்சு மனம்


பட படத்த காற்று
பக்கம் நின்ற
பாப்பாவின் பலூனை
பறித்து உயரே சென்றது
அங்கே ..
அடைபட்டு கொண்டிருக்கும்
தான் சேயை விடுவிக்க ...

விடுதலை பெற்ற
குஞ்சு தாயோடு பறக்க
சுருங்கி போனது பலூன்
அந்த பிஞ்சு மனம் போல ..



Monday, January 18, 2010

குறளும் குத்து மதிப்பும் -( குறள் எண் : 788 )

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
( குறள் எண் : 788 )
மு.வ : உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
சாலமன் பாப்பையா : பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.
பழனி ராஜ் : நீ...! ஜெயிலுனு போகும் முன் பெயிலு எடுத்துட்டு வருவது நட்பு

Sunday, January 17, 2010

குறளும் குத்து மதிப்பும்-( குறள் எண் : 433 )

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

மு.வ : பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
சாலமன் பாப்பையா : பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
பழனி ராஜ் : காலை தவறுதலாக மிதித்துக்கே "கட்அவுட்" வைத்து மன்னிப்பு வேண்டி நாணுவர் ..
ஸாரி என்று சொன்னாலே சரியா போகிவிடும் .. அதுக்கு விம்மி விம்மி அழுது விங்கி போய்விடுவர் பெரியோர்

Friday, January 15, 2010

குறளும் குத்து மதிப்பும்-( குறள் எண் : 656 )

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.



மு.வ : பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

சாலமன் பாப்பையா : தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.

பழனிராஜ் : அம்மாவுக்கு பசிச்சாலும் சும்மா இருந்தாலும் இருக்கலாம் ...மற்றவர்கள் "அம்மடியோவு' என்னும் செயலை செயக்கூடாது

பழ மொழி ஒரு ஆராய்ச்சி

" தம்பி உடையன் படைக்கு அஞ்சான்"
இந்த பழமொழி எப்படி வந்தது தெரியுமா ..?
யாருக்கு உடன் பிறந்த தம்பி இருக்காங்களோ ..
அவன் பிறந்த நாள் முதல்
" தின்கிற பண்டதிலிருந்து..உடுத்துற துணியிலும்
படுகிற தலையணையிலும் 'எனது எனது'
என்று ஒரு உள்நாட்டு போர் செய்து பயிற்சி"
இருப்பதால் ..
வெளிய ஒரு தகராறு வந்தால் ..
சண்டைக்கு அஞ்ச மாட்டன்
என்ன புரிஞ்சுதா ..?

Thursday, January 14, 2010

குறளும் குத்து மதிப்பும்-(குறள் எண் :963)

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

* மு.வ : செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.
* சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்
. பழனி ராஜ் : மாருதியில் ஏறும் போது தலை குனியனும் ரிக்ஷ்ஷவில் போறப்ப நிமிந்து போவனும்

குறளும் குத்து மதிப்பும் -குறள் எண் :107

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.


மு.வ : அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.
* சாலமன் பாப்பையா : இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.
பழனிராஜ்: அவனாக தந்தால் இனியன் ..அழுகொண்டே அளப்பவன் சிறியன்