Thursday, January 28, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 621 )

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்

மு.வ : துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

சாலமன் பாப்பையா : நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.

பழனி ராஜ்: இல்லத்தரசி புதிதாக ஒரு பலகாரம் செய்து எடுத்து வந்தாலோ அல்லது இல்லத்தரசியின் இளைய வேலை வெட்டி இல்லா சகோதரன் வீட்டுக்கு வந்தாலோ நீங்க செய்யவேண்டியது .." அடட..ரொம்ப நாளைக்கு அப்புறம் ..!" என்று புன்முறுவலோடு வரவேற்க்கவேண்டும்..வரக்கூடிய வினை (கோளாறு) வந்தே தீரும் உங்க வயித்துக்கும் மணி பர்சுக்கும் .......இல்லையேல் எதிர்வினை இன்னும் கடுமையாக இருக்கும்

No comments:

Post a Comment